பீட்ரூட் பிரியாணி





தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
பீட்ரூட் (சிறியது) - 2
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா இரண்டு
சோம்பு - அரை தேக்கரண்டி
பிரியாணி இலை - ஒன்று
பிரியாணி மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
சாம்பார் தூள் / மிளகாய் + தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
புதினா - ஒரு கைப்பிடி
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
தயிர் - 2 மேசைக்கரண்டி
நெய்யில் வறுத்த முந்திரி - 10
எண்ணெய் + வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். அரிசியை களைந்து ஊற வைக்கவும்.
தக்காளியுடன் கொத்தமல்லித் தழை, புதினா சேர்த்து அரைத்து வைக்கவும்.
பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு சேர்த்து வதக்கி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
பின் அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
பீட்ரூட் துருவல் சேர்த்து வதக்கி, தூள் வகைகள் சேர்த்து வதக்கவும். பின் தயிர் சேர்த்து பிரட்டவும்.
ஒன்றரை கப் நீர் விட்டு கொதித்ததும், அரிசியை சேர்த்து கொதிக்க விட்டு சிறுந்தீயில் மூடி வேக விடவும்.
முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும். சுவையான பீட்ரூட் பிரியாணி தயார்.
குறிப்புகள்:
காரத்திற்கேற்ப மிளகாயின் அளவை கூட்டி கொள்ளலாம். விரும்பினால் தயிருக்கு பதில் ஒரு கால் கப் மோர் (அ) ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்க்கலாம். குழந்தைகள் லஞ்ச்பாக்ஸிற்கு ஏற்ற இந்த பிரியாணியை, பொரித்த அப்பளம் (அ) வற்றல் வைத்து கொடுக்கலாம். நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம். விரும்பினால் பச்சை பட்டாணி சேர்க்கலாம். தக்காளி, கொத்தமல்லித் தழை, புதினாவை அரைக்காமல் பொடியாக நறுக்கி சேர்த்தும் வதக்கலாம். சுவையான குறிப்பிற்கு நன்றி இளவரசி.