பிரிஞ்சால் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - ஒரு கப்
பெரிய வெங்காயம், நாட்டுத் தக்காளி - தலா 2
சின்ன கத்திரிக்காய் - 6
பூண்டு - 8 பல்
தனி மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
பட்டை - சிறு துண்டு
பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகிய வற்றை மிகவும் பொடியாக நறுக்கவும்.
பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும். சின்ன கத்திரிக்காயை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை தாளித்து... பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கத்திரிக்காய், பூண்டு, மஞ்சள்தூள், தனி மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, சிறிதளவு நீர் தெளித்து மூடி போடவும். கத்திரிக்காய் வெந்ததும் உதிராக வடித்த சாதம் சேர்த்து நன்றாக கிளறி, கொத்தமல்லித்தழை, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.