பரங்கிப்பேட்டை சிக்கன் பிரியாணி
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/4 கிலோ
பஸ்மதி அரிசி – 2 கப்
----------------------------
--அரிந்து கொள்ள--
----------------------------
வெங்காய்ம் – 2
தக்காளி – 2
கொத்தமல்லி, கருவேப்பில்லை – 1 கைபிடி
பச்சை மிளகாய் – 1
----------------------------
-- சிக்கனுடன் சேர்த்து ஊறவைக்க --
----------------------------
மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
தனியா தூள் – 1/2 தே.கரண்டி
தயிர் - 1 கப்
உப்பு – தேவையான அளவு
----------------------------
-- இஞ்சிப்பூண்டு பேஸ்ட் --
----------------------------
பூண்டு – 6 பெரிய பல்
இஞ்சி – 1 துண்டு
----------------------------
-- மைய அரைத்து கொள்ள --
----------------------------
மிளகு – 1 தே.கரண்டி
கசகசா – 1 தே.கரண்டி
சீரகம் – 1 தே.கரண்டி
சோம்பு – 2 தே.கரண்டி
பட்டை – 1
ஏலக்காய் – 3
கிராம்பு – 3
----------------------------
-- முதலில் தாளிக்க --
----------------------------
எண்ணெய் ,நெய் – தேவையான அளவு
பட்டை, பிரியாணி இலை,கிராம்பு,ஏலக்காய் – தாளிக்க
செய்முறை:
மைய அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
சிக்கனை சுத்தம் செய்து ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களில் ஊறவைத்து கொள்ளவும். இஞ்சி பூண்டு பேஸ்டினை அரைத்து வைக்கவும்
வெங்காயம் + தக்காளியினை நீட்டாக அரிந்து கொள்ளவும். கொத்தமல்லி, புதினாவினை வெட்டி வைகக்வும்
பாத்திரத்தில் எண்ணெய் + 1 மேஜை கரண்டி நெய் ஊற்றி முதலில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்த பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, புதினா கொத்தமல்லி என்று ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி கொள்ளவும்.
பிறகு அரைத்து வைத்து இருக்கும் மசாலாவினை இதில் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
இத்துடன் ஊறவைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறி வேகவிடவும்.
சிக்கன் 3/4 வெந்தவுடன் அரிசியினை போட்டு தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து வேகவிடவும்.
பிரியாணி ரெடியானதும் அதன் மீது 1 மேஜை கரண்டி நெய் + எலுமிச்சை சாறு பிழிந்து கிளறிவிடவும். சுவையான பிரியாணி ரெடி.
குறிப்புகள்:
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடங்கள்
விரும்பினால் அரிசியினை அப்படியே இதில் சேர்த்து வேகவைக்காமல் 3/4 பதம் வேகவைத்து பிறகு இதில் சேர்த்து தம் முறையில் சமைக்கலாம்.
மசாலா பொடியினை வறுத்து செய்து பொடித்து வைத்து கொண்டால் விரும்பிய பொழுது சிக்கன், மட்டன் க்ரேவிகள் செய்யும் பொழுது கூட செய்யலாம்.
1 கப் அரிசிக்கு 1 மேஜை கரண்டி நெய் சேர்த்து கொண்டால் போதும்….
கண்டிப்பாக இஞ்சியின் அளவினைவிட பூண்டு அதிகம் சேர்த்து கொள்ளவும்.
இதனை சிக்கன் கிரேவி, முட்டை, தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.