பனீர் பிரியாணி (1)
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 கப்,
பெரிய வெங்காயம் - 2,
பனீர் - 250 கிராம்,
பச்சை மிளகாய் - 1,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
எலுமிச்சம் பழம் - 1/2 மூடி,
உப்பு - தேவையான அளவு.
அரைக்க :
------------
பட்டை - 1,
கிராம்பு - 2,
ஏலக்காய் - 2,
கொத்தமல்லி தழை - 1 கட்டு.
காய்ந்த மிளகாய் - 2,
இஞ்சி - சிறிது,
பூண்டு - 6 பல்.,
சோம்பு - 1 தேக்கரண்டி,
சீரகம் - 1 தேக்கரண்டி,
தனியா - 1 தேக்கரண்டி.
தாளிக்க:
-----------
பிரிஞ்சி இலை - சிறிது,
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.
நெய் - 1 தேக்கரண்டி.
செய்முறை:
அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்து வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாயை சன்னமாக, நீளமாக நறுக்கி வைக்கவும்.
பனீரை சிறு துண்டுகளாக்கி, எண்ணெயில் பொரித்து, வெந்நீரில் போட்டு வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் பிரிஞ்சி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அரைத்த மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
அத்துடன் மூன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
(பனீரை வெந்நீரிலிருந்து வடிக்கவும்).
தண்ணீர் கொதிக்கும் போது அரிசி, பனீர், உப்பு, எழுமிச்சை சாறு, நெய் சேர்த்து கலக்கி, மூடி 1 விசில் விட்டு, சிம்மில் 5 நிமிடம் வைத்து இறக்கவும்.
மணக்கும் பனீர் பிரியாணி ரெடி.