நெய் பிரியாணி

on on on off off 4 - Good!
3 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 கப்

பெரிய வெங்காயம் - 3

பச்சை மிளகாய் - 4

தேங்காய்ப்பால் - அரை கப்

புதினா, கொத்தமல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி அளவு

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

பட்டை - சிறு துண்டு

லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று

பிரிஞ்சி இலை - ஒன்று

நெய்யில் வறுத்த முந்திரி - 10

எண்ணெய், நெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பெரிய வெங்காயத்தை நீளமாக, மெல்லியதாக நறுக்கவும்.

பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். புதினா, கொத்தமல்லித்தழையை மிகவும் பொடியாக நறுக்கவும்.

பட்டை, லவங்கம், ஏலக்காயை பொடித்துக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பொடித்த பட்டை, லவங்கம், ஏலக்காய், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர், நறுக்கிய வெங்காயம், தேவையான உப்பு, புதினா, கொத்தமல்லித்தழை, கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்துக் கிளறவும்.

இதனுடன் தேங்காய்பால், இரண்டரை கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து நன்றாக கிளறி குக்கரை மூடவும். ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

குறிப்புகள்: