நீலகிரி பிரியாணி

on on on on off 4 - Great!
4 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி – 3 கப்

சிக்கன் – 1/2 கிலோ

இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜை கரண்டி

தயிர் – 1/2 கப்

எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி

எண்ணெய் & நெய் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

-------------------------------------------

-- சேர்க்க வேண்டிய தூள் வகைகள் --

-------------------------------------------

தனியா தூள் – 1 தே.கரண்டி

கரம்மசாலா – 1 தே.கரண்டி

மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி

-------------------------------------------

முதலில் தாளிக்க :

-------------------------------------------

ஏலக்காய், கிராம்பு, பட்டை – தலா இரண்டு

முழு மிளகு – 10

பிரியாணி இலை – 1

-------------------------------------------

அரைத்து கொள்ள :

-------------------------------------------

வெங்காயம் – 1 பெரியது

புதினா, கொத்தமல்லி – தலா அரை கப்

பச்சைமிளகாய் – 3

முந்திரி – 10

செய்முறை:

அரிசியினை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்.

வெங்காயத்தினை சிறிய துண்டுகளாக நறுக்கி அத்துடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து Microwaveயில் 4 நிமிடங்கள் வேகவிடவும். இதனை சிறிது நேரம் ஆறவிட்டு மிக்ஸியில் கொரகொரவெனெ அரைத்து கொள்ளவும்.

புதினா + கொத்தமல்லி + பச்சைமிளகாய் + தயிர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். முந்திரியினை தனியாக சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது வதங்கியவுடன் அரைத்த வெங்காய விழுதினை சேர்த்து நன்றாக 3 – 4 நிமிடங்கள் வதக்கவும்

பிறகு அரைத்த புதினா, கொத்தமல்லி விழுதினை சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.

இத்துடன் தூள் வகைகள் + தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கியவுடன், சிக்கன் + முந்திரி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

சிக்கன் நன்றாக வெந்து தண்ணீர் சுண்டி, எண்ணெய் மேலே வரும்.

அந்த சமயம், தேவையான அளவு தண்ணீர் + பாஸ்மதி அரிசி + உப்பு சேர்த்து வேகவிடவும்.

பிரஸர் குக்கரில் சுமார் 1 விசில் வரும்வரை வேகவிடவும். கடைசியில் எலுமிச்சை சாறு விட்டு கிளறிவிடவும்.

சுவையான நீலகிரி பிரியாணி ரெடி.

குறிப்புகள்:

சமைக்க தேவைப்படும் நேரம் : 40 நிமிடங்கள்

ஊறவைத்த அரிசியினை சிறிது நெயில் 1 நிமிடம் வதக்கிய பிறகு பிரியாணி செய்தால் சாதம் நன்றாக இருக்கும்…

இதில் தக்காளி சேர்க்க தேவையில்லை.

வெங்காயத்தினை சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து அதனை அரைத்து கொள்ள வேண்டும்.

புதினா+ கொத்தமல்லி + பச்சைமிளகாய் எல்லாம் சேர்த்து அரைத்து சேர்க்க வேண்டும்.

தனியாக கலர் எதுவும் சேர்க்காமலே மிகவும் கலர்புல்லாக இருக்கும்.