தேங்காய் பால் பிரியாணி

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி ரைஸ் - 1 கப்

உருளைக்கிழங்கு - 2 என்னம்

குடமிளகாய் - 1 என்னம்

பீன்ஸ் - 8 என்னம்

காலிப்ளவர் - 1/2 பூ

கேரட் - 2 என்னம்

பட்டாணி - 1/4 கப்

தேங்காய் பால - 2 கப்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

எண்ணைய் - 1 டேபிள்ஸ்பூன்

பிரியாணி இலை - 1 என்னம்

கொத்தமல்லி தழை - 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 3 என்னம்

முந்திரி பருப்பு - 1 டேபிள்ச்பூன்

உப்பு - ருசிக்கேற்ப

செய்முறை:

அரிசியை கழுவி 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

வாணலியில், நெய் ஊற்றி ஊறிய அரிசியை தண்ணீர் போகும் வரை வறுக்கவும்.

அனைத்து காய்கறிகளையும் பொடியாக நறுக்கவும்.

குக்கரில் எண்ணைய் விட்டு நீளமாக நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயத்தை வதக்கி எல்லா காய்களையும் சேர்த்து கிளறி விடவும்.

காய்கள நன்றாக் வெந்தவுடன் தேங்காய் பால சேர்க்கவும்.

கொதிக்க ஆரம்பித்தவுடன் உப்பு, அரிசியை சேர்த்து நன்றாக கலக்கவும்.

அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் அளவு வேகவைக்கவும்.

கொத்தமல்லி தழை, முந்திரியை வறுத்து அதை பிரியாணியில் தூவி இறக்கவும்.

சுவையான கமகமக்கும் தேங்காய் பால் பிரியாணி ரெடி.

குறிப்புகள்: