தம் கறி பிரியாணி
தேவையான பொருட்கள்:
கறி - 1 கிலோ
பாஸ்மதி அரிசி - 1 கிலோ ( 7 கப் )
தண்ணீர் - 7 கப்
நெய் - 100 கிராம்
எண்ணெய் - 200 கிராம்
பட்டை - 2
ஏலக்காய் - 4
கிராம்பு - 3
ரம்பயிலை - 1
இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
பல்லாரி - 1/2 கிலோ
தக்காளி - 1/4கிலோ
கொ.மல்லி - 1 பெரிய கட்டு
புதினா - 1 கட்டு
உப்பு - தேவைக்கு
கேசரி கலர் - கொஞ்சம்
எலுமிச்சை - 1
செய்முறை:
பல்லாரி, தக்காளி கொ.மல்லி, புதினாவை நறுக்கி வைக்கவும்.
கறியுடன் மிளகாய்த்தூள், உப்பு, தயிர் போட்து விரவி வைக்கவும்.
தாளிக்க:
குக்கரில் நெய், எண்ணெய், ஊற்றி காய்ந்த பின்பு பட்டை, ஏலம், கிராம்பு, ரம்பயிலை, போடவும். 2 நிமிடம் வதக்கவும்.
பின்பு கொஞ்சம் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தயிர், சேர்த்து தாளிக்கவும்.
2 நிமிடம் கழித்து மீதியிருக்கும் வெங்காயம், தக்காளி, கொ.மல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
குக்கர் மூடி போட்டு 20 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
பின்பு ஒரு அகல பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்தவுடன்
குக்கரில் உள்ள கறியை தவிர மற்றதை தண்ணீரில் சேர்க்கவும்.
பின்பு அரிசியை சேர்க்கவும். இதோடு வேக வைத்த கறி, உப்பு சேர்த்து 2 நிமிடம் அதிக தணலில் வைக்கவும்.
எலுமிச்சை சாறு, கேசரி கலர் கலந்து சேர்க்கவும்.
ஒரு முறை கிண்டி விட்டு பிறகு 15 நிமிடம் குறைந்த தணலில் வைத்து இறக்கவும்