தக்காளி பிரியாணி (1)

on on off off off 3 - Ok!
2 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பிரியாணி அரிசி - 1 டம்ளர்

தேங்காய் பால் - 1 டம்ளர்

தண்ணீர் - 1 டம்ளர்

தக்காளி - 4

பெரிய வெங்காயம் - 2

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 6 பல்

ஏலக்காய் - 1

கிராம்பு - 2

பட்டை - சிறு துண்டு

சோம்பு - 1 தேக்கரண்டி

புதினா இலை- 1 கைப்பிடி

வர மிளகாய் - 2

பச்சை மிளகாய் - 2

நெய் - 2 மேஜை கரண்டி

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

தண்ணீர் - 2 கப்

செய்முறை:

முதலில் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், வர மிளகாய், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகிய அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து அரைக்கவும்.

தக்காளியை நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் அரியவும்.

பிரசர் பேனில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்தவுடன், புதினா இலை போட்டு தாளித்து, வெங்காயத்தை சேர்த்து, சிவப்பு நிறம் வரும் வரை வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கிய பின்னர் தக்களியையும் போட்டு வதக்கி, மிதமான தீயில் அடுப்பை வைக்கவும்.

தக்காளி பாதி வதங்கியதும் அரைத்து வைத்த மசாலாவை போட்டு வதக்கவும்.

பின்னர் மஞ்சள் தூள், தேங்காய் பால், தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதன் பின்னர் அரிசியை கழுவி சேர்க்கவும்.

கொதி வந்ததும் உப்பை போட்டு பிரசர் பேன் மூடியால் மூடவும் ஆவி வந்ததும் வெயிட் போட்டு 2 சத்தம் வந்தவுடன் இறக்கி வைக்கவும்.

ஆறியதும் குக்கர் மூடியை திறந்து சிறிது நெய்யை ஊற்றி கிளறவும்.

குறிப்புகள்: