தக்காளி பிரியாணி

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அரிசி -1கப்

தக்காளி -2

வெங்காயம் -1

பச்சைமிளகாய் -2

பிரியாணி மசாலா -1ஸ்பூன்

இஞ்சி,பூண்டுவிழுது -1ஸ்பூன்

மஞ்சள்தூள் -1/4ஸ்பூன்

உப்பு -தேவையான அளவு

எண்ணை(அ)நெய் -2ஸ்பூன்

கொத்தமல்லிதழை -1கைப்பிடி

பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பிரிஞ்சி இலை -2

செய்முறை:

வெங்காயம்,மிளகாய்,தக்காளி நறுக்கி வைக்கவும்.

அரிசியை 1/2மணி நேரம் ஊறவைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணை(அ)நெய்விட்டு பட்டை,கிராம்பு,ஏலக்காய்,இலை தளித்து வெங்காயம்,மிளகாய் போடவும்.

வெங்காயம் வதங்கியவுடன்,இஞ்சி,பூண்டு விழுது போட்டு வதக்கி,தக்காளி போடவும்.

தக்காளி நன்றாக வதங்கியவுடன் மஞ்சள்தூள்,பிரியாணிமசாலா,கொத்தமல்லிதழை போட்டு உப்பும் போட்டு வதக்கவும்.

ஊறவைத்த அரிசியை நன்றாக கழுவி மசாலாவுடன் போட்டு பிரட்டி 2கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.

குக்கரில் வைப்பதென்றால் 3விசில் விட்டு இறக்கவும்.

சுவையான தக்காளி பிரியாணி ரெடி.இத்துடன் தயிர் பச்சடி நன்றாக இருக்கும்.

குறிப்புகள்: