தக்காளி தம் பிரியாணி
தேவையான பொருட்கள்:
சாதம் - ஒரு கப்
வெங்காயம் - 2
தக்காளி - 3
தேங்காய் - 3 பல்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பட்டை - 1
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
அன்னாசிப்பூ - 3 இதழ்
மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 5
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
வெங்காயம், தக்காளி இரண்டையும் நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நீளமாக நறுக்கின வெங்காயம், தக்காளி, அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும்.
இந்த மசாலா கலவையுடன் சாதத்தை சேர்த்து கிளறவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து குக்கரை இறுக்கமாக மூடி 5 நிமிடம் வேக விடவும். (அடிப்பிக்காமல் இருக்க சிறிது நேரத்திற்கு ஒரு முறை திறந்து கிளறி விடவும்)
வெந்ததும் இறக்கி மேலே சிறிது கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். சுவையான எளிமையான முறையில் தயாரிக்கும் தக்காளி தம் பிரியாணி ரெடி.