டிரை ஃப்ரூட்ஸ் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - ஒரு கப்
முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா (சேர்த்து) - கால் கப்
பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று
பால் - கால் கப்
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
குங்குமப்பூ - சிறிதளவு (2 டீஸ்பூன் பாலில் கரைத்துக் கொள்ளவும்).
மில்க்மெய்ட் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், நெய் - தேவையான அளவு
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
பாசிமதி அரிசியை 10 நிமிடங்கள் ஊறவிடவும். பாதாம், பிஸ்தாவை நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்கவும்.
பிறகு, கழுவிய அரிசி, பால், ஒன்றே கால் கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
அரிசி முக்கால் பாகம் வெந்ததும் பாலில் கரைத்த குங்குமப்பூ, வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா, சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
பிறகு குக்கரை மூடி, `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து, 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
பரிமாறும் முன் ஒரு டேபிள்ஸ்பூன் மில்க்மெய்டை சேர்த்து நன்கு கிளறி, சூடாகப் பரிமாறவும்.