சேமியா கறி பிரியாணி
தேவையான பொருட்கள்:
கறி - 1/2 கிலோ
சேமியா - 1/2 கிலோ
தாளிக்க :
பெ.வெங்காயம் - 3
தக்காளி - 3
இஞ்சி பூன்டு விழுது - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்
தயிர் - 1/2 கப்
மஞ்சள்த்தூள் - 1ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 1/2ஸ்பூன்
ப.மிளகாய் - 2
ரம்பயிலை - 1
கரம் மசாலா - 1ஸ்பூன்
கொத்தமல்லி , புதினா - கொஞ்சம்
தேங்காய்பால் - 1கப்
முந்திரி - 10
நெய் - 200கிராம்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
வாணலியில் கொஞ்சம் நெய் ஊற்றி காய்ந்தவுடன் சேமியாவை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.
முந்திரியையும் வறுத்து தனியாக வைக்கவும்.
குக்கரில் நெய் ஊற்றி காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
தாளிக்க கூடிய பொருட்களை சேர்க்கவும்.
எண்ணெய் விடும் போது சிறு துண்டுகளாக நறுக்கிய கறியை போடவும்
இதோடு தேங்காய்பால் 2 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும். 3 வீசில் வந்தவுடன் இறக்கி வீசில் போன பிறகு மீண்டும் அடுப்பில் வைத்து
கொதி வரும் போது வறுத்த சேமியா உப்பு சேர்க்கவும். குக்கரை மூடி ஒரு வீசில் வைத்து இறக்கவும். பரிமாறும் போது முந்திரி தூவி பரிமாறவும்.