செட்டிநாடு சிக்கன் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – 3 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 2
தேங்காய் - 1
நெய் – 2 மேஜை கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
----------------------------
சிக்கனுடன் ஊறவைக்க
----------------------------
சிக்கன் – 1/2 கிலோ
தயிர் – 1/2 கப்
மிளகாய் தூள் – 2 தே.கரண்டி
மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 2 தே.கரண்டி
உப்பு – 2 தே.கரண்டி
----------------------------
அரைத்து கொள்ள வேண்டிய பொருட்கள்
----------------------------
காய்ந்த மிளகாய் – 2
பச்சைமிளகாய் – 2
வெங்காயம் – 1 பெரியது
பூண்டு – 10 பல்
சோம்பு – 2 தே.கரண்டி
கிராம்பு, ஏலக்காய் , பட்டை – 1
இஞ்சி – 2 துண்டு
புதினா, கொத்தமல்லி – 1 கைபிடி
----------------------------
முதலில் தாளிக்க
----------------------------
எண்ணெய் + நெய் – 1 மேஜை கரண்டி
பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை – 1
சோம்பு – 1 மேஜை கரண்டி
செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து சிக்கனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து குறைந்தது 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மைய அரைத்து கொள்ளவும்.
அரிசியினை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். தேங்காயில் இருந்து பால் எடுத்து கொள்ளவும்.
பாத்திரத்தில் நெய் ஊற்றி ஊறவைத்த அரிசியினை தண்ணீர் வடித்து வதக்கி தனியாக வைத்து கொள்ளவும்.
பாத்திரத்தில் நெய்+ எண்ணெய் ஊற்றி முதலில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து பின் வெங்காயம் + அரைத்துவைத்துள்ள மசாலா + தக்காளி + ஊறவைத்துள்ள சிக்கன் என ஒவ்வொன்றாக தனி தனியாக சேர்த்து வதக்கி கொள்ளவும்.
3 கப் அரிசிக்கு 2 கப் தேங்காய் பால் + 2 கப் தண்ணீர் + தேவையான அளவு உப்பு + புதினா இலை சேர்த்து ஊற்றி கொதி வந்தவுடன் அரிசியினை சேர்க்கவும்.
அரிசி 3/4 பாகம் வெந்தவுடன் அதனை தம் போடவும்.
சுவையான செட்டிநாடு சிக்கன் பிரியாணி ரெடி.
குறிப்புகள்:
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடங்கள்
அரிசியினை 10 நிமிடங்களுக்கு மேலாக ஊறவைக்க வேண்டாம்.
ஊறவைத்த அரிசியினை தனியாக 1 மேஜை கரண்டி நெய்யில் வறுத்து கொண்டால் நெய்யினை குறைத்து உபயோகிக்கலாம்…சுவையாகவும் இருக்கும்.
ண்ணீர் சேர்க்காமல் இத்துடன் Chicken Stock சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்
இதே மாதிரி மட்டனிலும் செய்யலாம்…மட்டனில் செய்யும் பொழுது தேங்காய் பால் சேர்க்க தேவையில்லை.
இதனை ராய்தா, முட்டை, சிக்கன் மசாலா போன்றவையுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்