சுண்டல் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 2 கப்
வெள்ளை கொண்டைக்கடலை - 1 1/2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
உருளைக்கிழங்கு - 2
பச்சைமிளகாய் - 4
இலவங்கம் - 3 என்னம்
பட்டை - ஒரு துண்டு
ஏலக்காய் - 2 என்னம்
எலுமிச்சைச்சாறு - 2 மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலாதூள் - 1 டீஸ்பூன்
கெட்டியான தயிர் - 3/4 கப்
நெய் - 1/2 கப்
சோடாஉப்பு - 2 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
புதினா இலை - 4 தண்டு
பிரியாணி இலை - 2 என்னம்
செய்முறை:
அரிசியை கழுவி தண்ணீரில் உப்பு கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
வெள்ளை கொண்டைக்கடலையை உப்பு கலந்த நீரில் முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் வெள்ளை கொண்டைக்கடலையுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு சோடா உப்பு, சிறிதளவு உப்பு ஆகியன கலந்து வேக வைக்கவும்.
தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த அரிசியை களைந்துபோட்டு, அதில் கரம் மசாலாதூள், எலுமிச்சைச்சாறு, உப்புப்போட்டு அரைவேக்காடாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலி வைத்து அதில் நெய் விட்டு இலவங்கம், பட்டை, ஏலக்காய் போட்டு தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கி, அடுத்து பச்சைமிளகாய், வெங்காயாம், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும் கடைசியில் உருளைக்கிழங்குப்போட்டு வதக்கவும்.
பின்னர் கலவையினுள் மஞ்சள்தூள், மிளகாய்தூள் போட்டு 2 நிமிடம் கிண்டு கிண்டி விடவும், வாணலியை அடுப்பில் இருந்து கீழே இறக்கி தயிர்விட்டு, அதில் வேகவைத்த கொண்டைக்கடலையும் போட்டு கிண்டவும்.
அதை மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் நெய் மேலே வரும் வரை சூடுப்படுத்தி கலவை சேர்ந்து வரும் வரை வேக விடவும்.
கடைசியில் அரைவேக்காடாக வேகவைத்து எடுத்துள்ள சாதத்தை கொண்டைக்கடலை கலவையுடன் கலந்து மிதமான தீயிலேயே 10 நிமிடம் மூடிப் போட்டு வேகவைக்கவும்.
அதில் புதினாஇலை, பிரியாணிஇலை இரண்டையும் தனியாக வதக்கி பிரியாணியில் போடவும்.
இப்பொழுது சுவையான கொண்டைக்கடலை பிரியாணி தயார். ஏதேனும் ரெய்த்தாவுடன் பரிமாறவும்.