சிம்பிள் தம் பிரியாணி

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 3 கப்

சிக்கன் - 1/2 கிலோ

இஞ்சி பூண்டு விழுது - 2 மேஜை கரண்டி

தயிர் - 1/2 கப்

எலுமிச்சை சாறு - பாதி பழம்

---------------------------------

நறுக்கி கொள்ள :

---------------------------------

வெங்காயம் - 2 பெரியது

பச்சைமிளகாய் - 3

புதினா, கொத்தமல்லி - 2 கைபிடி அளவு

---------------------------------

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :

---------------------------------

மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி

மிளகாய் தூள் - 2 தே.கரண்டி

உப்பு - தேவையான அளவு

---------------------------------

முதலில் தாளிக்க :

---------------------------------

எண்ணெய் + நெய் - 2 மேஜை கரண்டி

பட்டை- 1

கிராம்பு - 2

பிரியாணி இலை - 1

பிரியாணி மசாலா அல்லது கரம்மசாலா - 1/2 தே.கரண்டி

செய்முறை:

அரிசியினை 1 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். வெங்காயத்தினை நீளமாக வெட்டிவைக்கவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறிகொள்ளவும். புதினா, கொத்தமல்லியினை பொடியாக நறுக்கவும்.

சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும். சிக்கனுடன் தயிர் + மஞ்சள் தூள் + மிளகாய் தூள் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் + நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் + பிரியாணி மசாலா சேர்த்து தாளித்து கொள்ளவும்.

பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

வெங்காயம் சிறிது வதங்கியதும் இத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

இத்துடன் கலந்து வைத்து இருக்கும் சிக்கன் கலவையினை சேர்த்து சிக்கனை வேகவிடவும்.

சிக்கன் 90% வெந்த பிறகு அரிசியினை தண்ணீர் இல்லாமல் அதன் மீது பரவலாக பரவி விடவும். (கவனிக்க : அரிசியினை சேர்பதற்கு முன்பாக பிரியாணிக்கு தேவையான அளவு உப்பு இருக்கின்றது என்பதினை கண்டிப்பாக சரி பார்த்து கொள்ளவும். )

1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்ற அளவில் அரிசியின் மீது தண்ணீர் மசாலாவுடன் கலக்காத மாதிரி ஊற்றிவிடவும். அத்துடன் எலுமிச்சை சாறு + புதினா , கொத்தமல்லியினை மேலே தூவிவிடவும்.

இதனை மிதமான தீயில் தட்டு போட்டு மூடி பிரியாணியில் தண்ணீர் 80 %- 90% வற்றும் வரை வேகவிடவும். இப்பொழுது சாதமும் சுமார் 75-80% வெந்து இருக்கும்.

பிறகு மிகவும் குறைந்த தீயில் அடுப்பினை வைத்து மேலும் 5 - 8 நிமிடங்கள் வைத்து அடுப்பினை நிறுத்தி அப்படியே 5 நிமிடங்கள் வைக்கவும்.

அதன் பின்னர் தட்டினை திறந்து அதனை ஒரு முறை மெதுவாக கிளறிவிடவும்.

சுவையான பிரியாணி ரெடி.

குறிப்புகள்:

சமைக்க தேவைப்படும் நேரம் : 40 நிமிடங்கள்

அரிசியினை கண்டிப்பாக 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

அதே மாதிரி இந்த பிரியாணிக்கு தண்ணீர் வைக்கும் பொழுதும் 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். (கவனிக்க : தண்ணீரின் அளவினை குறைக்க தேவையில்லை. )

இப்பொழுஇதனை தயிர் பச்சடி, முட்டை, ப்ரை போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.து அரிசியினை பிரியாணிக்கு சேர்க்கும் விதத்தில் தான் அந்த உத்தியில் (Technique) இருக்கின்றது. ஊறவைத்த அரிசியினை பிரியாணி மசாலாவின் மீது பரவலாக சேர்க்க வேண்டும். (அதாவது வேகவைத்த சாதத்தினை தம் பிரியாணிக்கு செய்வது மாதிரி இந்த முறையில் நாம் வெரும் ஊறவைத்த அரிசியினை மசாலாவுடன் சேர்த்து கிளறாமல் மேலே பரவிவிட வேண்டும். )

இரண்டாவதாக கவனிக்க வேண்டியது, தண்ணீரினை பரவலாக பரவி இருக்கும் அரிசியின் மீது மெதுவாக ஊற்ற வேண்டும். (அதாவது தண்ணீர் ஊற்றும் பொழுது அரிசி மசாலாவுடன் கலந்துவிட கூடாது. )

தண்ணீர் ஊற்றிய பிறகு தட்டு போட்டு மூடி அதனை பிரியாணியினை மிதமான தீயில் தண்ணீர் குறைந்தது, சாதம் சுமார் 75 - 80% வேகும் வரை வைக்கும் . பிறகு தீயினை மிகவும் குறைந்த தீயில் வைத்து மேலும் 5 - 8 நிமிடங்கள் வேகவைத்து அடுப்பி நிறுத்திவிடவும் அப்படியே 5 நிமிடங்கள் விடவும்.

பிறகு தட்டினை திறந்து மெதுவாக அனைத்து சேர்ந்த மாதிரி ஒரே ஒரு முறை கிளறிவிட்டு தட்டு போட்டு 2 நிமிடங்கள் மூடிவிடவும். இப்பொழுது பிரியாணி சூப்பராக இருக்கும்.