சிக்கன் ஸ்டாக் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – 2 கப்
சிக்கன் ஸ்டாக் – 3 கப்
எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
நெய் – 1 மேஜை கரண்டி
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
--------------------------
-- அரிந்து கொள்ள : --
--------------------------
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 2
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
--------------------------
-- சிக்கனுடன் ஊறவைத்து கொள்ள --
--------------------------
சிக்கன் – 1/4 கிலோ
தயிர் – 1 கப்
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
உப்பு – 1 தே.கரண்டி
--------------------------
-- முதலில் தாளிக்க --
--------------------------
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தேவையான அளவு
சோம்பு தூள் – 1 தே.கரண்டி
எண்ணெய் – 1 மேஜை கரண்டி
செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
அரிசியினை 10 நிமிடங்கள் ஊறவிடவும். வெங்காயம், தக்காளியினை நீளமாகவும், பச்சைமிளகாயினை இரண்டாக கீறிவைக்கவும். புதினா + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி சேர்த்து வதக்கவும்
இத்துடன் ஊறவைத்துள்ள சிக்கன் சேர்த்து வேகவிடவும்.
5 நிமிடம் கழித்து புதினா + கொத்தமல்லி + பச்சைமிளகாய் சேர்த்து வேகவிடவும்.
பிறகு அரிசியினை சேர்த்து கிளறி 2 - 3 நிமிடங்கள் வேகவிடவும்.
மைக்ரேவேவில் வைக்கும் பாத்திரத்தில் இதனை கொட்டி அத்துடன் சிக்கன் ஸ்டாக் + உப்பு சேர்த்து கிளறவும்.
மைக்ரேவேவில் 15 நிமிடங்கள் தட்டு போட்டு மூடி வேகவிடவும்.
சுவையான எளிதில் செய்ய கூடிய பிரியாணி ரெடி.
குறிப்புகள்:
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடங்கள்
இதில் சிக்கன் ஸ்டாக சேர்த்து செய்வதால் கூடுதல் சுவையுடன் இருக்கும். சோடியம் குறைவான ஸ்டாக் பயன்படுத்தவும். நல்லது…
வெஜ் பிரியாணிக்கும் இதே மாதிரி சிக்கன் ஸ்டாகிற்கு பதிலாக வெஜ் ஸ்டாக் பயன்படுத்தினால் பிரியாணி நிமிடங்கள் காலியாகிவிடும்…
இதே மாதிரி தாளித்து பிரஸர்குக்கரில் செய்யலாம்…நான் எப்பொழுதுமே எல்லாமே கிளறி மைக்ரேவேவில் வைத்து சமைத்துவிடுவேன். விரும்பினால் இதனை மைக்ரேவேவிலும் செய்யலாம்…ஆனா எனக்கு அந்த பொருமை எல்லாம் கிடையாது…