சிக்கன் பிரியாணி (9)
தேவையான பொருட்கள்:
சிக்கன் - முக்கால் கிலோ
அரிசி - அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 1 (பெரியது)
பட்டை - 1
கிராம்பு - 1
பிரியாணி இலை் - 1
ஏலக்காய் - 1
அரைக்க வேண்டிய பொருட்கள்:
காய்ந்த மிளகாய் - 15
இஞ்சி - விரல் அளவு
பூண்டு - 2 முழு பூண்டு
சோம்பு - ஒரு தேக்கரண்டி
நெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்றாக அரைத்து, சிக்கனுடன் பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அரிசியை கழுவி ஊற வைத்து பின்பு தண்ணீரை நன்கு வற்ற விடவும். பின்னர் பாத்திரத்தில் நெய் விட்டு அரிசியை தண்ணீர் போக லேசாக வறுத்து எடுக்கவும்.
குக்கரை அடுப்பில் வைத்து அதில் பாதியளவு எண்ணெய், பாதியளவு நெய் விடவும். பிறகு கிராம்பு, ஏலக்காய், பட்டை போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம் போட்டு வதக்கவும் அதனுடன் தக்காளி சேர்க்கவும்.
தக்காளி நன்கு வதங்கிய பின்பு ஊற வைத்த சிக்கன் கலவையை சேர்த்து நன்றாக பிரட்டவும்.
சிக்கன் வதங்கியதும் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
தண்ணீர் நன்கு கொதித்த பின்பு அதில் அரிசி சேர்க்கவும்.
அரிசி தண்ணீருடன் நன்றாக சுண்ட வேண்டும். பிறகு குக்கரை மூடி போட்டு 5 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
சுவையான சிக்கன் பிரியாணி ரெடி.
குறிப்புகள்:
இதில் புதினா கொத்தமல்லி சேர்க்கலாம் குக்கரை மூடி போடும் முன் புதினா சேர்த்து மூடவும். வாசம் நன்றாக வரும்.
அரிசியை வறுத்து விடுவதால் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் நன்றாக வரும். ஈஸி பிரியாணி செய்முறை இது.