சிக்கன் பிரியாணி (7)

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 3/4 கிலோ

பாஸ்மதி ரைஸ் - 3 கப்

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

புதினா - சிறிய கட்டு

கொத்தமல்லி தழை - சிறிய கட்டு

பட்டை - 2

கிராம்பு - 3

அன்னாசி மொக்கு - 2

பிரியாணி இலை - 4

லவங்கம் - 2

ஏலக்காய் - ஒன்று

பச்சை மிளகாய் - 3

இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி

தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை மேசைக்கரண்டி

தயிர் - 2 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

சீரகம் - ஒரு மேசைக்கரண்டி

மிளகு - அரை மேசைக்கரண்டி

சோம்பு - ஒரு மேசைக்கரண்டி

கொத்தமல்லி - ஒரு மேசைக்கரண்டி

புதினா - ஒரு கைப்பிடி

கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி

வரமிளகாய் - ஒன்று

முந்திரி - 10

ஏலக்காய் - ஒன்று

பட்டை - 2

கிராம்பு - 2

பூண்டு - 5 பல்

இஞ்சி - 4 துண்டு (ஒரு பூண்டு அளவில்)

செய்முறை:

சிக்கனுடன் சிறிது மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் 2 தேக்கரண்டி தயிர் சேர்த்து நன்கு பிரட்டி ஒரு மணி நேரம் ஊற விடவும். வெங்காயம், தக்காளி, புதினா மற்றும் மல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை பச்சையாக அரைத்து தனியே வைத்துக் கொள்ளவும். அரிசியை 45 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

ஒரு பெரிய கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், லவங்கம், அன்னாசி மொக்கு மற்றும் பிரியாணி இலையை போட்டு பொரிந்து வரும்படி வறுத்து பின் நீளமாக கீறிய பச்சைமிளகாயை போட்டு பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.

பச்சை வாசம் போனதும் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

நன்கு குழைந்ததும் சிறிது புதினா மற்றும் மல்லித் தழையை சேர்த்து வதக்கவும்.

நன்கு வதக்கியதும், ஊறிய சிக்கனை போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்கு பிரட்டி 5 நிமிடம் வேக விடவும்.

பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு மிளகாய்த் தூள், தனியா தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி மூடி வைக்கவும்.

சிக்கன் வெந்து எண்ணெய் பிரியும் சமயத்தில், ஊறும் அரிசியில் உள்ள தண்ணீரை வடித்து, கடாயில் உள்ள சிக்கன் பிரியாணி கிரேவியை அரிசியில் கொட்டவும்.

அதில் 4 1/2 கப் தண்ணீர் சேர்த்து கிரேவி, அரிசி, தண்ணீர் எல்லாவற்றையும் நன்கு கலக்கி கொஞ்சம் உரைப்பான உப்பு சுவையுடன், மீதமுள்ள மல்லித் தழை மற்றும் புதினா தழை சேர்த்து எலக்ட்ரிக் குக்கரில் வைக்கவும்.

அரிசி வெந்ததும் குக்கரை திறந்து 2 தேக்கரண்டி நெய் ஊற்றி அடிப்படாமல் கிளறவும். கமகமவென சுவையான சிக்கன் பிரியாணி ரெடி.

குறிப்புகள்: