சிக்கன் பிரியாணி (6)
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 2 டம்ளர்
வெங்காயம் - 3
தக்காளி - 5
கொத்தமல்லி - அரை கப்
புதினா - அரை கப்
இஞ்சி பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி
பட்டை - 1
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
அன்னாசி பூ-1
பிரிஞ்சி இலை-1
கலர் பொடி- சிறிதளவு
நெய் - 2 மேசைகரண்டி
உப்பு - தேவையான அளவு
சிக்கனில் சேர்க்க:
சிக்கன் - அரைகிலோ
பச்சை மிளகாய் - 4 (காம்பு மட்டும் நீக்கியது)
ஜாதிக்காய் பவுடர் - கால் மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
பிரியாணி மசாலா தூள் - 2 மேசைக்கரண்டி
தயிர் - ஒரு கப்
எலுமிச்சை சாறு - ஒரு குழிகரண்டி
கொத்தமல்லி - அரை கப்
புதினா - அரை கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
பாஸ்மதியை தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து அரைவேக்காட்டுக்கு உதிரியாக வேக வைத்து வைக்கவும்.
சிக்கனில் சேர்க்க கொடுத்துள்ள பொருட்களுடன் ஒன்றாக கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும்
கடாயில் நெய்விட்டு வாசனைபொருட்களை தாளிக்கவும். பின் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
இப்போது ஊற வைத்த சிக்கன் மற்றும் தக்காளி சேர்த்து நீர்விடாமல் சிறுதீயில் வேகவிடவும் (கிரேவி பதத்தில் இருக்க வேண்டும்)
சிக்கன் க்ரேவி தயாரானதும் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு சாதம், சிறிதளவு கொத்தமல்லி புதினா, சிறிதளவு கிரேவி என ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். மேலே சாதம் வரும் அளவுக்கு அரேஞ்ச் செய்யவும்.
பின் கலர்பொடியை நீரில் கரைத்து சுற்றி வட்ட வடிவில் ஊற்றவும் இதனை 5 நிமிடம் முதல் பத்து நிமிடம் வரை தம்மில் வைத்து பின் கரண்டி உபயோகப்படுத்தாமல் குலுக்கி விட்டு பரிமாறவும்.