சிக்கன் பிரியாணி (24)

on on on off off 7 - Good!
3 நட்சத்திரங்கள் - 7 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ [கழுவப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது]

பாஸ்மதி அரிசி - 1 கிலோ [கழுவப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு]

வெங்காயம் - 5 அல்லது 6 நடுத்தர அளவில் [மெலிதாக நறுக்கப்பட்டது]

தக்காளி - 5 நடுத்தர அளவில் [மெலிதாக நறுக்கப்பட்டது]

இஞ்சிப்பூண்டு விழுது – 2 1/2 தேக்கரண்டி

கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி

கரிவேப்பிலை – 1 கொத்து [இரண்டு பாகங்களாக சுத்தப்படுத்திப் பிரித்துக்கொள்ளவும்]

கொத்தமல்லி இலைகள் – 1 கொத்து [இரண்டு பாகங்களாக சுத்தப்படுத்திப் பிரித்துக்கொள்ளவும்]

பச்சை மிளகாய் - 5 அல்லது 6 [பிரியாணி எந்தளவிற்குக் காரமாக வேண்டுமோ அதைப் பொறுத்து]

சிவப்பு மிளகாயத் தூள் – 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி

பிரியாணி மசாலா – 1 தேக்கரண்டி [கடையில் வாங்கியது]

தயிர் – 200 கிராம்

நெய் – 100 கிராம்

சூரியகாந்தி எண்ணெய் – 4 தேக்கரண்டிகள்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஒரு டம்ளரை எடுத்து அரிசியை அளந்துகொள்ளவும். கழுவி, ஊறவைத்து எடுத்து வைத்துக்கொள்க. அதே டம்ளரினால் தண்ணீரை அளந்து (4 கப் அரிசிக்கு, 6 கப் தண்ணீர்) ஒரு சமையல் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். நடுத்தர தீயில் இந்த தண்ணீரைக் கொதிக்கவிடவும்.

இன்னொரு பாத்திரத்தில் கோழி (சுத்தப்படுத்தப்பட்டது, கழுவப்பட்டது), நறுக்கப்பட்ட தக்காளி, பச்சை மிளகாய், கொஞ்சம் கொத்துமல்லி இலைகள், கொஞ்சம் புதினா, தயிர், சிவப்பு மிளகாயத்தூள், மஞ்சள் தூள் ஆகிவற்றை எடுத்துக்கொள்ளவும். கைகளால் நன்று கலந்துகொள்ளவும். மூடி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இதற்கிடையில், எண்ணெயையும் நெய்யையும் ஒரு பிரஷர் குக்கரில் சூடுபடுத்திக்கொள்க. இவற்றோது கொத்துமல்லி புதினா இலைகளை கரம் மசாலா தூளுடன் சேர்த்துக்கொண்டு கவனமாக தூள் எரிந்துவிடாமல் வறுக்கவும்.

நறுக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிரமாகும்வரை வறுக்கவும். இப்போது இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும்வரை வறுக்கவும்.

இவற்றோடு மேரினேட் செய்யப்பட்ட கோழித்துண்டுகளை நடுத்தர தீயில் கலந்துகொள்ளவும். இவற்றோது பிரியாணி மசாலாவைச் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

இப்போது வழிமுறை 1ல் இருந்து அளந்து வைத்துள்ள வெந்நீரை உப்போடு சேர்த்துக்கொள்ளவும். காரசாரமான பிரியாணி வேண்டுமென்றால் இன்னும்கொஞ்சம் பச்சை மிளகாயை இந்த சமயத்தில் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். ஊறும் அரிசியிலிருந்து தண்ணீரை நீர்த்துவிட்டு மேலே கொதிக்கும் வெந்நீரில் சேர்க்கவும். மெதுவாகக் கலக்கவும். மூடவும். பிரஷர் வரத்தொடங்கியதும், விசிலைப் போடவும்.

10-12 நிமிடங்களுக்குச் சமைக்கவும், தீயை நிறுத்தவும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பிரஷரை வெளியேற்றிவிடவும். அப்படிச் செய்வதால் சாதம் பூப்போல் இருக்கும்.

மூடியை எடுத்துவிட்டு கரண்டியால் அரிசியை வலப்புறம் அல்லது இடப்புறமாக சுழற்றி கலக்கவும். அரிசி உடைந்துவிடும் என்பதால் வலப்புறமும் இடப்புறமும் சுழற்றி கலப்பது முக்கியமான வழிமுறை. அதனால் ஒரு பக்கம் மற்றும் செய்யவும் ஒன்று இடப்பக்கம் அல்லது வலப்பக்கம்.

கேசரோலில் (casserole) இப்போது மாற்றிக்கொள்ளவும். சாதத்தின் மீது கொஞ்சம் நெய் சேர்த்துக்கொள்ளவும். கொஞ்சம் கரம் மசாலா கொஞ்சம் கொத்துமல்லி இலைகளையும் தூவிக்கொள்ளவும்.

குறிப்புகள்:

வெங்காயம்-வெள்ளரி ரைத்தா, சிக்கன் 65, கத்திரிக்கா குழம்புடன் சூடாகப்