சிக்கன் பிரியாணி (19)

on on on on off 6 - Great!
4 நட்சத்திரங்கள் - 6 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சிக்கன் (அல்லது) சிக்கன் லெக் பீஸ் - 1 கிலோ

பாஸ்மதி அரிசி - 3 கப்

எண்ணெய் - 5 தேக்கரண்டி

வெண்ணெய் - 3 தேக்கரண்டி

பிரிஞ்சி இலை - 2

ஏலக்காய் தூள் - இரு சிட்டிகை

பட்டை - 4

லவங்கம் - 5

சோம்பு - 1 தேக்கரண்டி

இஞ்சி - 1 பெரியது

பூண்டு - 1 பெரியது

வெங்காயம் - 3

பச்சை மிளகாய் - 10

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

புதினா - 1/2 கப்

கொத்தமல்லி இலை - 1/2 கப்

தக்காளி - 3

தேங்காய் துருவல் - 1/2 கப்

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

பெப்பர் - 1 தேக்கரண்டி

லெமன் - 1 பெரியது

நெய் - 3 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 கைபிடி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் எண்ணெய், வெண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரிஞ்சி இலை, சோம்பு, ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

பட்டை, லவங்கம், சோம்பு, இஞ்சி, பூண்டுஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து குக்கரில் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் மிக்ஸியில் அரைத்து குக்கரில் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.

பிறகு மஞ்சள் தூள், பாதி உப்பு, புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு வதக்கவும்.

வதங்கியதும் தக்காளியை அரைத்து சேர்த்து நன்கு வதக்கவும். (தேவையெனில் நடுவில் எண்ணெய் சேர்க்கலாம்.)

தேங்காயை அரைத்து சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் நன்றாக வதங்கிய பின் கோழியை சேர்த்து வதக்கி கொண்டே இருக்கவும்.

பின் மிளகாய் தூள், பெப்பர் (காரம் பார்த்து சேர்க்கவும்).

தண்ணீர் சேர்க்காமல் கோழியுடன் மசாலா நன்கு ஒட்டி சுருண்டு வரும் வரை வதக்கவும்.

அரிசி சேர்த்து வதக்கி 6 கப் தண்ணீர் விட்டு லெமன் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் நிறுத்தி விடவும்.

பின் அரை மணி நேரம் கழித்து குக்கரை திறந்து நெய், கறிவேப்பிலை சேர்த்து லேசாக கிளறி பரிமாறவும்.

குறிப்புகள்: