சிக்கன் பிரியாணி (16)

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

பாஸ்மதி அரிசி - 3 கப்

தண்ணீர் - ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப்

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 3

புதினா - அரை கட்டு (அல்லது) ஒரு கப் பொடியாக நறுக்கியது

கொத்தமல்லி - அரை கட்டு (அல்லது) ஒரு கப் பொடியாக நறுக்கியது

இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு

பூண்டு - பத்து பல்

மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி

கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி

பச்சை மிளகாய் - எட்டு

எலுமிச்சம் பழம் - ஒன்று

தயிர் - ஒரு கப்

பொடிக்க:

பட்டை - ஒரு துண்டு

கிராம்பு - ஆறு

ஏலக்காய் - ஆறு

எண்ணெய் - அரை கப்

நெய் - ஒரு மேசைக்கரண்டி(விருபப்பட்டால்)

உப்பு - இரண்டு தேக்கரண்டி

செய்முறை:

பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி விட்டு இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

சிக்கனை தயிர், அரை தேக்கரண்டி உப்பு மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும்.

பட்டை, லவங்கம் மற்றும் ஏலக்காயை பொடித்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, புதினா மற்றும் கொத்துமல்லியை நீளமாக நறுக்கி கொள்ளவும்.

பச்சை மிளகாயை நீளமாக அரிந்துக் கொள்ளவும். அரிசியை ஊறவைத்த தண்ணீரை வடித்து விட்டு எடுத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பிறகு தக்காளி, புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியவுடன் பொடித்த லவங்கம், பட்டை, ஏலக்காய் பொடி மற்றும் கரம் மசாலாவை போட்டு வதக்கவும்.

பிறகு சிக்கனை போட்டு வதக்கி மூடி போட்டு வைக்கவும். 15 நிமிடம் வரை அடிக்கடி கிளறவும்.

சிக்கன் பாதி வெந்தவுடன் நாலரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் அரிசியை போட்டு கிளறவும்.

அரிசி பாதி வெந்தவுடன் அனலை குறைத்து விட்டு எலுமிச்சையை பிழிந்து மூடி வைக்கவும். அரிசி வேகும்வரை அடிக்கடி பார்த்து மெதுவாக சாதம் உடையாமல் கிளறி விடவும். அரிசி வெந்தவுடன் இறக்கிவிட்டு புதினா மற்றும் கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும். சுவையான சிக்கன் பிரியாணி ரெடி.

குறிப்புகள்: