சிக்கன் பிரியாணி (15)
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 500 கிராம்
பச்சரிசி - 3 கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
புதினா - ஒரு கட்டு
கொத்தமல்லி - ஒரு கட்டு
பட்டை - 10 கிராம்
கிராம்பு - 6
ஏலக்காய் - 4
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - 10 பல்
மஞ்சப்பொடி - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 8
பிரியாணி இலை - 5
எண்ணெய் - 5 தேக்கரண்டி
நெய் - 5 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை 6 கப் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மிக்ஸியில் கிராம்பு, ஏலக்காய், பட்டை மற்றும் பிரியாணி இலையை பொடி செய்து கொள்ளவும்.
குக்கரில் எண்ணெயும், நெய்யையும் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவைகளைப் போட்டு சிவக்க வதக்கவும்.
பிறகு நறுக்கின பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்
அதன் பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
புதினா மற்றும் கொத்தமல்லியை சிறிதாக அரிந்து, சேர்த்து வதக்கவும். சிக்கன் மற்றும் மஞ்சப்பொடியை போட்டு அதனுடன் வதக்கவும். தக்காளியை அரிந்து அதனுடன் வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கி எண்ணெய் வரும் போது கரம் மசாலா சேர்க்கவும்.
பின்னர் அரிசியில் உள்ள தண்ணீரை சிறிது ஊற்றி கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதித்ததும் ஊற வைத்த அரிசி மற்றும் தண்ணீரை ஊற்றி கலக்கவும். உப்பு சேர்க்கவும்.
அரிசி பாதி வெந்தவுடன் குக்கர் விசில் போடவும். இரண்டு விசில் வந்தவுடன் இறக்கி விடவும்.