சிக்கன் பிரியாணி (14)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சிக்கன் - ஒரு கிலோ

பாஸ்மதி அரிசி - ஒரு கிலோ

பெரிய வெங்காயம் - 6

தக்காளி - 6

பச்சை மிளகாய் - 6

இஞ்சி, பூண்டு விழுது - 2 1/2 மேசைக்கரண்டி

தேங்காய் பால் - 2 கப்

பட்டை - 3

கிராம்பு - 10

ஏலக்காய் - 15

அன்னாசி மொக்கு - 2

மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி

தனியா தூள் - 3 மேசைக்கரண்டி

கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி

சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி

சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

தயிர் - கால் கப்

எலுமிச்சை - ஒன்று

புதினா - ஒரு கப்

கொத்தமல்லி - ஒரு கப்

உப்பு - 3 மேசைக்கரண்டி

முந்திரி - 30

டால்டா - ஒரு மேசைக்கரண்டி

நெய் - ஒரு மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

செய்முறை:

அரிசியில் தண்ணீர் ஊற்றி 45 நிமிடம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து விட்டு எடுத்து பார்த்தால் பொலபொலவென்று இருக்க வேண்டும்.

இதற்கு தேவையான வாசனைப் பொருட்களை தயாராய் வைத்துக் கொள்ளவும். விருப்பத்திற்கு ஏற்ப ஏலக்காய், முந்திரி மற்றும் இதர வாசனைப் பொருட்களின் அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.

வெங்காயம், தக்காளி இரண்டையும் மெல்லிய நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீள வாக்கில் கீறி வைத்துக் கொள்ளவும். புதினா கொத்தமல்லி தழைகளை கழுவி வைக்கவும். கோழிக் கறியினை சுத்தம் செய்து, அதிகம் எலும்பில்லாமல் எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி மொக்கு போட்டு பொரிய விடவும். உடனே நறுக்கின வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். கருகிவிடக்கூடாது. ஆனால் நிறம் மாறும் வரை சுமார் 5 நிமிடங்கள் வதக்கவும்.

அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, கீறின பச்சை மிளகாய் போட்டு 3 நிமிடம் வதக்கவும். பிறகு நறுக்கின தக்காளி, புதினா போட்டு வதக்கவும். தக்காளி நன்கு வதங்க வேண்டும்.

பின்னர் மஞ்சள் தூள், தனியா தூள், சோம்பு தூள், சீரகத் தூள், கரம் மசாலா தூள் போட்டு நன்கு கிளறி விடவும். பிறகு மிளகாய் தூள் போட்டு கிளறவும். எல்லாம் ஒன்று சேர்ந்து கெட்டியான குழம்பாக வரும் வரை வதக்கவும்.

இதனுடன் சிக்கன் துண்டங்களைப் போட்டு மசாலா சிக்கனில் சேரும்படி நன்கு பிரட்டி விடவும். அதில் தயிர் சேர்த்து அதிக தீயில் வைத்து கிளறவும்.

பிறகு 2 கப் தேங்காய் பால், 6 கப் தண்ணீர் சேர்த்து உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி மூடி விடவும்.

சுமார் 15 நிமிடம் கழித்து, கொதித்து வாசனை வந்ததும் அரிசியை களைந்து போட்டுக் கிளறி விடவும்.

சுமார் 10 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும். முக்கால் அளவு வெந்ததும் முந்திரி, சிறிது புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறி, பிறகு தீயை குறைத்து தோசைக்கல்லை அடுப்பில் போட்டு, அதன் மேலே பிரியாணி உள்ள பாத்திரத்தை வைத்து மூடிவிடவும்.

மூடியின் மேல் கனமான பொருளை வைக்கவும். மேலே நெருப்புத் துண்டங்களையும் வைக்கலாம். சுமார் 20 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து, நெய் விட்டுக் கிளறி இறக்கவும்.

குறிப்புகள்: