சிக்கன் பிரியாணி (13)
தேவையான பொருட்கள்:
சிக்கன் - அரை கிலோ
பாசுமதி அரிசி - அரை கிலோ (2 1/2 ஆழாக்கு)
வெங்காயாம் - 5
தக்காளி - 5
பச்சைமிளகாய் - 6
தேங்காய்ப்பால் - ஒரு கிளாஸ்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 100 மி.லி
நெய் - 3 மேசைக்கரண்டி
புதினா - ஒரு கப்
கொத்தமல்லித்தழை - ஒரு கப்
இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
ஏலக்காய் - 2
பட்டை - 2
அன்னாசிப்பூ - சிறிது
சோம்பு - ஒரு தேக்கரண்டி
தயிர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஏலக்காய், சோம்பு, பட்டை ஆகியவற்றை தூளாக்கவும். பச்சைமிளகாய், புதினா, கொத்தமல்லியில் பாதியை அரைத்து கொள்ளவும்.
சிக்கனில் தயிர், மஞ்சள் தூள், ஏலக்காய்த்தூள், இஞ்சி, பூண்டு விழுது, புதினா கொத்தமல்லி அரைத்ததில் பாதி போட்டு பிசறி வைக்கவும். அரிசியை ஊற வைக்கவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சோம்புத்தூள், பட்டைத்தூள் போட்டு தாளித்து, வெங்காயத்தை வதக்கி, மீதி இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.
பிசறிய சிக்கனை சேர்த்து கிளறி, தக்காளி, பச்சைமிளகாய், மிளகாய் தூள் போட்டு உப்பு, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி சிக்கனை பாதி வெந்தவுடன் தண்ணீரை வடித்துவிட்டு அரிசியை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
பிறகு தேங்காய்ப்பாலுடன் 4 கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதித்தவுடன் சிறு தீயில் மூடி வைக்கவும்.
3/4 பதம் வெந்தவுடன் நெய் ஊற்றி கிளறி மூடி மேலே ஒரு கனமான பாத்திரத்தை வைக்கவும். சிறிது நேரத்தில் மறுபடியும் கிளறி அடுப்பை அணைக்கவும்.