சிக்கன் பிரியாணி

on on on on off 3 - Great!
4 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சீரகச் சம்பா அரிசி - அரை கிலோ (அல்லது) 2 டம்ளர்

சிக்கன் - 350 கிராம்

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - ஒன்று

பச்சை மிளகாய் - ஒன்று

தயிர் - 2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

எலுமிச்சைச் சாறு - ஒரு மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

நெய் - ஒரு மேசைக்கரண்டி

வதக்கி அரைக்க:

பெரிய வெங்காயம் - 4

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - 2 அங்குல துண்டு

பூண்டு - ஒரு கைப்பிடி

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

புதினா - ஒரு கைப்பிடி

கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி

பட்டை - சிறிது

கிராம்பு - 3

ஏலக்காய் - 3

அன்னாசிப்பூ - ஒன்று

தாளிக்க:

பட்டை - சிறிது

கிராம்பு - ஒன்று

ஏலக்காய் - ஒன்று

அன்னாசிப்பூ - ஒன்று

ப்ரிஞ்சி இலை - ஒன்று

செய்முறை:

அரிசியைக் களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியை மெல்லியதாக நீளமாக நறுக்கி வைக்கவும்.

சிக்கனைச் சுத்தம் செய்து தயிர், மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து பிரட்டி ஊறவைக்கவும்.

வாணலியில் அரை மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, வதக்கி அரைக்கக் கொடுத்துள்ளப் பொருட்களைச் நன்கு வதக்கி ஆறவைக்கவும். (விருப்பமுள்ளவர்கள் ஒரு மேசைக்கரண்டி தேங்காய் துருவலும் சேர்த்துக் கொள்ளலாம்). ஆறியதும் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில் மீதமுள்ள எண்ணெயை விட்டு காய்ந்ததும், தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் அரை பதமாக வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும், ஊற வைத்த சிக்கனைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்க்கவும். அத்துடன் மிக்ஸி ஜாரில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கழுவி ஊற்றவும்.

தண்ணீர் நன்கு வற்றி எண்ணெய் பிரிந்து வந்ததும் ஊற வைத்த அரிசியை நீரை வடிகட்டிவிட்டுச் சேர்த்து வதக்கவும்.

சலசலப்பு அடங்கியதும் 4 டம்ளர் சுடு தண்ணீர் மற்றும் உப்புச் சேர்த்து கலந்து குக்கரை மூடி வெயிட் போட்டு, மூன்று விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

ப்ரஷர் அடங்கியதும் திறந்து ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து 5 நிமிடங்கள் மூடி வைக்கவும். வதக்கி அரைத்த சிக்கன் பிரியாணி தயார்.

குறிப்புகள்: