சிக்கன் பால் பிரியாணி

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கோழி - 1/2 கிலோ

பாசுமதி அரிசி - 1 1/2 கப்

பசும்பால் - 1 1/2 கப்

பச்சை மிளகாய் - 2

வெங்காயம் - 1

தக்காளி - 1

பிரியாணி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தாளிக்க

தயிர் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மல்லி தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)

புதினா - ஒரு கை நிறைய

கொத்தமல்லி - ஒரு கை நிறைய

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

தண்ணீர் - 1 1/4 கப் (அல்லது) 1 1/2 கப் (அரிசியை பொருத்து)

எண்ணெய் + நெய் - 1 குழிக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியை கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும். கோழி சுத்தம் செய்து தயிர், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வைக்கவும்.

வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய் கீரி வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து குழைய வதக்கவும்.

பின் கொத்தமல்லி, புதினா, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து பிரட்டவும்.

இதில் ஊற வைத்த கோழி சேர்த்து மூடி வேக விடவும். கோழி வெந்ததும் பால், தண்ணீர், உப்பு, அரிசி சேர்த்து வேக விடவும்.

முக்கால் வெந்ததும் 20 நிமிடம் தம்மில் போடவும்.

குறிப்புகள்: