சிக்கன் சேமியா பிரியாணி
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2கிலோ
சேமியா - 400கிராம்
வெங்காயம் - 3
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 4
மல்லி இலை, புதினா - ஒருகையளவு
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை பழம் - 1சிறியது
தயிர் - 1 குழிகரண்டி
எண்ணெய் - 2 குழிகரண்டி
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பட்டை - 1 துண்டு
கல்பாசி இலை - சிறிது
நெய - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சேமியாவை வறுத்து வைக்கவும்சிக்கனை கழுவி வைக்கவும் வெங்காயம்,தக்காளி நறுக்கி வைக்கவும் மிளகாயை கீறிவைக்கவும்
அடுப்பில் அகலமான பாத்திரம் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கல்பாசி இலை,பட்டை,கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயத்தை சிவக்க வதக்கி அதனுடன் தக்காளி இஞ்சிபூண்டு சேர்த்து மிளகாய்த்தூள் மஞ்சள்தூள்சேர்த்துபச்சைவாசனை போக வதக்கவும்
வதக்கியதில் சிக்கன்,தயிர்,உப்பு சேர்த்து வதக்கி சிறு தீயில் மூடி வேகவிடவும்
(தண்ணீர் சேர்க்க வேண்டாம் கோழியில் வரும் தண்ணீர் போதும்)
சிக்கன் வெந்ததும் இரண்டு டம்ளர் தண்ணீர் (400மில்லி) சேர்த்து கொதிக்கவிடவும் கொதிவரவும் சேமியா சேர்த்து கிளறி அதனுடன் லெமன் சாறு மல்லி இலை புதினா நெய் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு மூடி சிறுதீயில் 5 நிமிடம் வைத்து இறக்கவும் சிறிது நேரம் கழித்து அடியில் இருந்து ஒருமுறை கிளறி பின் பரிமாறவும்.