சிக்கன் சப்ஜி பிரியாணி

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 400 கிராம்

சிக்கன் - கால் கிலோ

கேரட் - 100 கிராம்

பட்டாணி - 100 கிராம்

உருளைக்கிழங்கு - 100 கிராம்

வெங்காயம் - நான்கு

தக்காளி - மூன்று

தயிர் - இரண்டு மேசைக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசைக்கரண்டி

கொத்தமல்லி - சிறிது

புதினா - ஆறு இதழ்

பச்சைமிளகாய் - நான்கு

மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி

பட்டை - இரு அங்குல அளவு

கிராம்பு - இரண்டு

ஏலம் - ஒன்று

பிரிஞ்சி இலை - ஒன்று

எண்ணெய் - கால் கப்

நெய் - ஒரு தேக்கரண்டி

ரெடி கலர் பொடி - சிறிது

லெமென் ஜூஸ் - பாதி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியை களைந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.

சிக்கன் சுமாரான துண்டுகள் போட்டால் போதும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். தக்காளி எட்டு எட்டு துண்டுகளாக போடவும். உருளைக்கிழங்கையும் எட்டாக போடவும், கேரட்டை சிறிது தடிமனாக அரை வட்டத்தில் செதுக்கி கொள்ளவும்.

எண்ணெயை காயவைத்து பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலம் போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அடிப்பிடிக்காமல் நன்கு கிளறி பொன்முறுவல் ஆனதும் கொத்தமல்லித்தழை, புதினாவை போட்டு வதக்கவும்.

அதனுடன் காய்களை போட்டு இரண்டு நிமிடம் வதங்க விடவும்.

அடுத்து தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தூளை சேர்த்து சிம்மில் பத்து நிமிடம் வைக்கவும்.

நன்கு தக்காளி வெந்ததும் சிக்கன், தயிரை சேர்த்து மசாலா ஏறும் வரை கிளறி மீண்டும் பத்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.

எல்லாம் வெந்து கூட்டானதும் ஒரு சட்டியில் தண்ணீரை வைத்து அதில் சிறிது கொத்தமல்லி, புதினாவை போட்டு கொதி வந்ததும் அரிசி களைந்து போட்டு உப்பு சேர்த்து லெமென் ஜூஸை ஊற்றி முக்கால் வேக்காட்டில் வடித்து சிக்கன் சப்ஜி கூட்டில் சேர்க்கவும்.

பிறகு ரெடி கலர் பொடியை கரைத்து தெளித்து விட்டு நெய் சேர்த்து கிளறி 15 நிமிடம் தம்மில் விடவும். தம் ஆனதும் ஐந்து நிமிடம் கழித்து கிளறி தயிர் சட்னியுடன் சாப்பிடவும்.

குறிப்புகள்: