சிக்கன் கீமா பிரியாணி

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சிக்கன் ( Boneless Skinless Chicken ) – 1/4 கிலோ

பாஸ்மதி அரிசி – 2 கப்

வெங்காயம் – 1 பெரியது

தக்காளி – 2

புதினா, கொத்தமல்லி – 1 கைபிடி அளவு

தயிர் – 1/2 கப்

----------------------------------------

சிக்கனுடன் சேர்த்து அரைக்க :

----------------------------------------

பூண்டு – 4 பல்

இஞ்சி – 1 பெரிய துண்டு

பச்சைமிளகாய் – 3 (காரத்திற்கு ஏற்றாற் போல)

----------------------------------------

சேர்க்க வேண்டிய தூள் வகைகள்

----------------------------------------

மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி

மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி

கரம் மசாலா தூள் – 1/4 தே.கரண்டி (விரும்பினால்)

உப்பு – தேவையான அளவு

----------------------------------------

தாளிக்க :

----------------------------------------

எண்ணெய் – 1 மேஜை கரண்டி

பட்டை – 1

கிராம்பு – 2

ஏலக்காய் – 2

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும். சிக்கனுடன் அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் (இஞ்சி,பூண்டு, பச்சைமிளகாய் ) சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

அரிசியினை 10 – 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும். வெங்காயம் + தக்காளியினை நீளமாக வெட்டி வைக்கவும்.

பிரஸர் குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும். அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்

வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கிய பிறகு புதினா, கொத்தமல்லி + அரைத்த சிக்கன் சேர்த்து வதக்கவும்.

இத்துடன் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

சிக்கனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும். ( 1 கப் அரிசிக்கு 1 கப் + 1/2 கப் தண்ணீர் )

தண்ணீர் கொதிக்கும் பொழுது, ஊறவைத்த அரிசியினை கழுவி, சிக்கனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

அரிசி சேர்த்த பிறகு, தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிரஸர் குக்கரினை மூடி 1 விசில் வரும் வரை வேகவிடவும். விசில் அடங்கியதும், அதில் எலுமிச்சை பழம் பிழிந்து கிளறிவிடவும்.

சுவையான எளிதில் செய்ய கூடிய சிக்கன் கீமா பிரியாணி ரெடி. இத்துடன் ரய்தா, சிக்கன் ப்ரை அல்லது கிரேவியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்புகள்:

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்

சிக்கன் அரைத்த செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்படுவாங்க.

சிக்கனை அரைக்காமல், Minced chickenயே வாங்கி கொள்ளலாம்.