க்ரீன் சன்னா பிரியாணி
தேவையான பொருட்கள்:
சன்னா - ஒரு கப்
அரிசி - 2 கப்
உப்பு
நெய் / வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி, புதினா - சிறிது
வெங்காயம் - 2
உருளை - ஒன்று
அரைக்க:
புதினா - 2 பிடி
கொத்தமல்லி - ஒரு பிடி
பச்சை மிளகாய் - 3
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
சோம்பு - கால் தேக்கரண்டி
முந்திரி - 7 - 10
பட்டை - சிறு துண்டு
லவங்கம் - 4
செய்முறை:
அரைக்க கொடுத்தவற்றை நைசாக அரைக்கவும். அரிசியை கழுவி ஊற வைக்கவும். குக்கரில் வெண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இதில் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். கொண்டைக்கடலையை நன்றாக ஊற வைத்து பாதி பதம் வேக வைத்து வைக்கவும்.
எண்ணெய் பிரிந்து வர வதங்கியதும் பாதி வேக வைத்த சன்னா, தோல் நீக்கி நறுக்கிய உருளை, அரிசி, உப்பு அனைத்தும் சேர்த்து தேவையான நீர் விட்டு கலந்து குக்கரை மூடவும்.
ஒரு விசில் விட்டு சிறுந்தீயில் 10 நிமிடம் வைத்து எடுத்து விடவும். இதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா இலைகளை சேர்த்து கலந்து மூடி 10 நிமிடம் வைக்கவும்.
சுவையான க்ரீன் சன்னா பிரியாணி தயார். ரைத்தாவுடன் சுவையாக இருக்கும்.
குறிப்புகள்:
நீரின் அளவும், சிறுந்தீயில் வைக்கும் நேரமும் அரிசியை பொருத்தது. பாசுமதி என்றால் 5 நிமிடமே போதுமானது. இது வழக்கமான பொன்னி புழுங்கல் என்பதால் 10 நிமிடம் வைத்திருக்கிறேன். விரும்பினால் சிறிது தேங்காயும், இஞ்சி, பூண்டும் கூட அரைக்கும் போது சேர்க்கலாம்.