கோஸ் பச்சைப் பட்டாணி பிரியாணி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 கப்

கோஸ் - 100 கிராம்

பச்சைப் பட்டாணி - 50 கிராம்

பெரிய வெங்காயம் - 2

நாட்டுத் தக்காளி - 3

பச்சை மிளகாய் - 3

தேங்காய்ப்பால் - ஒரு கப்

இஞ்சி - சிறு துண்டு

பூண்டு - 4 பல்

தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்

பட்டை - சிறு துண்டு

லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

நெய், எண்ணெய்பு - தேவையான அளவு.

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கோஸ், வெங்காயம், தக்களியை பொடியாக நறுக்கவும்.

பச்சைப் பட்டாணியை வேகவைத்துக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு, தேங்காய்த் துருவலை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து... வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.

பிறகு, கோஸ், பச்சைப் பட்டாணி, தக்காளி, தேவையான உப்பு சேர்த்து மேலும் வதக்கவும் இதனுடன் தேங்காய்ப்பால், இரண்டரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியைப் போட்டு நன்றாக கிளறி குக்கரை மூடவும். ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, கொத்தமல்லித்தழை தூவவும். கேரட் ராய்த்தாவுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: