கோவை அங்கண்ணன் பிரியாணி
தேவையான பொருட்கள்:
சிக்கன் - அரை கிலோ
சீரக சம்பா அரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
புதினா, கொத்தமல்லி - 1 கப்
தயிர் - கால் கப்
எலுமிச்சை - அரை மூடி
உப்பு எண்ணெய் மற்றும் நெய் - தேவைக்கேற்ப
---------------------------------------
மசாலா அரைக்க:
---------------------------------------
சின்ன வெங்காயம் - 7
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பட்டை - 1
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
-------------------------
தாளிக்க:
--------------------------
பட்டை - 1
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பட்டை இலை - 2
செய்முறை:
மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் அரைத்து சிக்கனுடன் தயிர், உப்பு சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியை கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்க்கவும். பின்பு பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அடுத்து சிறிது புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறவும்.
இதனுடன் ஊற வைத்த சிக்கனை சேர்த்து கிளறி மூடி போட்டு சிறிது நேரம் வேக விடவும். சிக்கன் ஓரளவு வெந்ததும் ஊற வைத்த அரிசியை சேர்த்து கிளறவும்.
மற்றொரு அடுப்பில் 4 கப் தண்ணீர் கொதிக்க வைத்து பிரியாணி கலவையுடன் சேர்க்கவும்.
தண்ணீர் சேர்த்ததும் உப்பு சரிபார்த்து மூடி போட்டு வேக விடவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் சிறிதளவு நெய், எலுமிச்சை சாறு, மீதி புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறி விடவும்.
பாத்திரம் அல்லது குக்கரை (குக்கராக இருந்தால் வெயிட்டுடன்) மூடி போட்டு 10 நிமிடம் சிறு தீயில் வைத்திருக்கவும். 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு 20 நிமிடம் கழித்து பரிமாறவும். சுவையான கோவை அங்கண்ணன் சிக்கன் பிரியாணி தயார்.
குறிப்புகள்:
மிளகாய் தூள் உட்பட எந்த தூள் வகைகளும் சேர்க்காமல் பச்சை மிளகாய் மட்டுமே சேர்த்து செய்வதால் மிளகாய்களின் காரத்தைப் பொருத்து எண்ணிக்கையை கூட்டியோ குறைத்தோ சேர்க்கவும்.
ஆனியன் ரைத்தாவுடன் பரிமாறவும்.