கோழி பிரியாணி (5)

on on on off off 11 - Good!
3 நட்சத்திரங்கள் - 11 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கோழித் துண்டுகள் - ஒரு கிலோ

பிரியாணி அரிசி - ஐந்துக் கோப்பை

வெங்காயம் - ஐந்து

தக்காளி - ஐந்து

பச்சைமிளகாய் - பதினைந்து

பட்டை - ஐந்து

இலவங்கம் - ஐத்து

ஏலக்காய் - ஐந்து

இஞ்சி - மூன்று அங்குலத் துண்டு

முழூப் பூண்டு-இரண்டு

புதினா - ஒரு கட்டு

கொத்தமல்லி - ஒரு கட்டு

செய்முறை:

அரிசியை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.வெங்காயம்,மிளகாய்,தக்காளியை,நறுக்கி கொள்ள வேண்டும்.

இஞ்சி பூண்டை,மைய்ய அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு வாய்யகன்ற பாத்திரத்தில் கால் கோப்பை எண்ணெய் ஊற்றி அதில் ஊறிய அரிசியை மட்டும் தண்ணீரில்லாமல் போட்டு கண்ணாடி மாதிரி ஆகும் வரை நன்கு வதக்கி வைக்கவேண்டும்.

பிறகு குக்கரை அடுப்பில் வைத்து,கால் கோப்பை நெய்,அரைக் கோப்பை எண்ணெயை ஊற்றி வெங்காயத்தையும்,வாசனைப் பொருட்களையும்,போட்டு நன்கு வறுக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானவுடன்,இஞ்சிபூண்டு,பச்சைமிளகாய்,தக்காளி, புதினா, கொத்தமல்லி,ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு கோழித் துண்டுகளை போட்டு,இரண்டு தேக்கரண்டி மஞ்சத்தூள், இரண்டு தேக்கரண்டி உப்புத்தூள்,சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்பு வதக்கிய அரிசியை போட்டு நன்கு கிளறி பத்து கோப்பை தண்ணீரை அளந்து ஊற்றவும். உப்பை பதம் பார்த்து மேலும் இரண்டு தேக்கரண்டி

உப்புத்தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு குக்கரை மூடிவிடவேண்டும்.

ஐந்து நிமிடங்கள், கழித்து அனலை குறைத்து விட்டு, வெயிட்டை போட்டு பத்து நிமிடங்கள் வைத்திருந்து இறக்கி விடவும்.

பத்து நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து ஒரு எலுமிச்சை மூடியை பிழிந்துவிட்டு சூடாக பறிமாறவும்.

குறிப்புகள்: