கோழி பிரியாணி (4)

on on on on off 4 - Great!
4 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கோழி – 1 கிலோ

பச்சை அரிசி – 1 படி

வெங்காயம் – 2

தக்காளி – 4

தேங்காய் விழுது – 1 கப்

பச்சை மிளகாய் – 5

ஏலக்காய், கிராம்பு – தலா 2

பட்டை – 1 இன்ச் அளவு

இஞ்சி பூண்டு விழுது – 4 ஸ்பூன்

தயிர் – 2 கப்

மசாலாத் தூள் – 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

மல்லி கீரை – 1 கட்டு

நெய், எண்ணெய் சேர்த்து – 200 மில்லி

கேசரி பவுடர் – சிறிது

உப்பு – தேவைக்கு

செய்முறை:

முதலில் சுத்தம் செய்த கோழி கறியில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, உப்பு அனைத்தையும் போட்டு புரட்டி ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.

சட்டியில் நெய், எண்ணெய் கலந்து ஊற்றி பட்டை,கிராம்பு,ஏலக்காய், பச்சை மிளகாய்,வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது,மல்லிகீரை அனைத்தையும் (இதில் சொன்ன வரிசைப்படி) ஒவ்வொன்றாக போட்டு தாளித்து, கடைசியாக, புரட்டி வைத்துள்ள கோழி கறியையும் வெட்டிய தக்காளியையும் போட்டு நன்றாக வதக்கவேண்டும்.

வதங்கியவுடன் வேகும் அளவு தண்ணீரை ஊற்றி, மசாலாத்தூள்,மஞ்சள் தூள், தேங்காய் விழுது,உப்பு போட்டு வேக வைக்கவேண்டும்.

அடுப்பில் தேவையான அளவு தண்ணீர் வைத்து, கேசரி பவுடர் கலந்து கொதி வந்தவுடன் அரிசியை கழுவி போட்டு பதமான அளவு வெந்தவுடன் வடித்து, வேக வைத்துள்ள குருமாவில் கொட்டி,

அடுப்பை லேசாக வைத்து புழுங்கியவுடன் இறக்கி பறிமாறலாம்.

குறிப்புகள்: