கோழி பிரியாணி (2)

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கோழி - 3/4 கிலோ

அரிசி - 1 1/2 கப்

வெங்காயம் - 2

தக்காளி - 3

கறிவேப்பிலை - சிறிது

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

அரைக்க:

பச்சை மிளகாய் - 5

பட்டை, லவங்கம், ஏலக்காய் - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

தேங்காய் - 1/2 கப்

முந்திரி - 10

நெய் - 4 மேசைக்கரண்டி

எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியை ஊற வைக்கவும். அரைக்க வேண்டியவற்றை மசாலாவாக அரைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். அதன் பின்னர் கோழி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, மூடி வேக விடவும்.

கோழி வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் மசாலா சேர்த்து நன்றாக எண்ணெய் திரண்டு வரும் வரை கிளறவும்.

2 3/4 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதித்ததும் அரிசி சேர்த்து மூடி வெந்ததும் எடுக்கவும். சுவையான கோழி பிரியாணி ரெடி.

குறிப்புகள்: