கோதுமை பிரியாணி
தேவையான பொருட்கள்:
உடைத்த கோதுமை - இரண்டு கப்
எண்ணெய் - அரை கப்
வெங்காயம் - ஒன்று (பெரியது)
பச்சைமிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி
தக்காளி - ஒன்று (பெரியது)
புதினா இலை - அரை கப்
கொத்தமல்லி இலை - அரை கப்
ஜாதிக்காய் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
கேரட் - அரை கப்
பீன்ஸ் - அரை கப்
பச்சை பட்டாணி - அரை கப்
தண்ணீர் - மூன்று கப் (சமைக்க)
உப்பு - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் - பாதி
செய்முறை:
உடைச்ச கோதுமையை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நீளமாக அரிந்து கொள்ளவும். கேரட், பீன்ஸை சிறிதாக அரிந்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சைமிளகாயை போடவும்.
வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளி, புதினா இலை, கொத்தமல்லி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
ஜாதிகாய்த்தூள், கரம் மசாலாவை சேர்த்து வதக்கவும். கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். பிறகு மூன்று கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கோதுமையை வடித்துவிட்டு தண்ணீர் கொதிக்கும் போது குக்கரில் போடவும். ஒரு முறை கிளறிவிட்டு மூடிபோடவும். விசில் போடவேண்டாம். அடுப்பின் தீயை குறைத்துவிடவும்.
கோதுமை வெந்தவுடன் எலுமிச்சையை பிழிந்து கிளறி விட்டு மூடவும்.
ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு, அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.