கொத்துக்கறி பிரியாணி

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கொத்துக்கறி (மட்டன்) - 1/4 கிலோ

சீரக சம்பா அரிசி - 1/2 கிலோ

பெரிய வெங்காயம் - 2

சின்ன வெங்காயம் - 10

தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்

கசகசா - 2 டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

தனியா தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

பட்டை - சிறிது

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

புதினா - 1 கைப்பிடி

கொத்தமல்லி - 1 கைப்பிடி

எண்ணெய் - 2 ஸ்பூன்

நெய் - 5 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

பெரிய வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் சன்னமாக, நீளமாக நறுக்கி வைக்கவும்.

கசகசா, தேங்காய், சின்ன வெங்காயம், கொத்தமல்லி, புதினா சேர்த்து அரைத்து வைக்கவும்.

குக்கரில் பாதி நெய், எண்ணெயை விட்டு காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும்.

பொரிந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அரைத்த விழுது, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கழுவிய கொத்துக்கறி சேர்த்து வதக்கவும்.

சிறிது நேரம் வதக்கிய பின் ஊற வைத்த அரிசியை சேர்த்து கிளறி 2 மடங்கு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து குக்கரை மூடவும்.

1 விசில் வந்ததும், 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.

மீதி நெய்யில் வெங்காயம், பச்சை மிளகாயை பொன்னிறமாக வறுத்து சாதத்தில் கொட்டி, குழையாமல் கிளறி பரிமாறவும்.

குறிப்புகள்: