கொண்டைக்கடலை பிரியாணி (2)
தேவையான பொருட்கள்:
சென்னா / கொண்டைக்கடலை - 1/2 கப்
பாஸ்மதி அரிசி - 2 கப்
தயிர் - 1/2 கப்
வெங்காயம் - 1 பெரியது (நீளமாக வெட்டி கொள்ளவும்)
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி
புதினா, கொத்தமல்லி - 1 கைபிடி அளவு
எலுமிச்சை சாறு - 1 மேஜை கரண்டி
----------------------------------------
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
----------------------------------------
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
பிரியாணி மசாலா - 1/2 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
----------------------------------------
தாளிக்க :
----------------------------------------
எண்ணெய் + நெய் - 1 மேஜை கரண்டி
பட்டை - 1
கிராம்பு - 2
பிரியாணி இலை - 1
----------------------------------------
செய்முறை:
1/2 கப் கொண்டைக்கடலை சுமார் 3 - 4 மணி நேரம் ஊறவைத்து கொண்டு அதனை பிரஸர் குக்கரில் போட்டு 4 - 5 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.
பிரஸர் குக்கரில் எண்ணெய் + நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் தாளித்து அத்துடன் இஞ்சி பூண்டு சேர்த்து வதங்கிய பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இத்துடன் வேகவைத்துள்ள கொண்டைக்கடலை + தூள் வகைகள் சேர்த்து கிளறவும்
பிறகு தயிர் சேர்த்து நன்றாக கிளறி 1 -2 நிமிடங்கள் வதக்கவும்.
அரிசியினை கழுவி தண்ணீர் இல்லாமல் இதில் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
இத்துடன் நறுக்கிய புதினா, கொத்தமல்லி + 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதிவந்தவுடன் பிரஸர் குக்கரினை மூடி 1 விசில் வரும் வரை வேகவிடவும்.
குக்கரில் பிரஸர் அடங்கியதும் அதனை திறந்து அத்துடன் 1 தே.கரண்டி நெய் + எலுமிச்சை சாறு ஊற்றி ஒரு கிளறிவிடவும்.
சுவையான சத்தான பிரியாணி ரெடி.
குறிப்புகள்:
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
கொண்டைக்கடலையில் அதிக அளவு நார்சத்து மற்றும் புரோடீன் உள்ளது. இது கொலஸ்ட்ராயினை குறைக்க பெரிதும் உதவுகின்றது.
இதனை ராய்தா, உருளை வறுவல், சிப்ஸ் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.