கேராளா மலபார் மட்டன் பிரியாணி

on on on off off 11 - Good!
3 நட்சத்திரங்கள் - 11 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி – 1 கிலோ

மட்டன் – 1 கிலோ

பல்லாரி – 500 கிராம்

நெய் – 5 ஸ்பூன்

முந்திரி – 100 கிராம்

இஞ்சி – 50 கிராம்

பூண்டு – 50 கிராம்

திராட்சை – 100 கிராம்

மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்

தக்காளி – 300 கிராம்

பச்சை மிளகாய் – 100 கிராம்

துருவிய தேங்காய் – அரை கப்

கசகசா – 2 ஸ்பூன்

தயிர் – தேவையான அளவு

கரம் மசாலாத்தூள் – 2 ஸ்பூன்

மிளகாய்த்தூள் – சிறிதளவு

புதினா – சிறிதளவு

எலுமிச்சம்பழம் – 1

கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மட்டனை பிரியாணிக்கு தகுந்த துண்டுகளாக வாங்கி கழுவிக்கொள்ளவும்.

பல்லாரியை நீளவாக்கில் நறுக்கவும். தக்காளி, புதினா, கறிவேப்பிலையையும் நறுக்கி வைக்கவும்.

பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும். கசகசாவை, தேங்காய் துருவலுடன் சேர்த்து அரைக்கவும்.

வாணலியில் 5 ஸ்பூன் எண்ணையை ஊற்றி பல்லாரியை முதலிலும், பின்னர் தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு, மிளகாய் விழுதை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். இத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூளை போட்டு கிளறவும்.

பிறகு மட்டனை வாணலியில் போடவும். அனைத்தையும் ஒன்றாக கலக்கி தயிர், உப்பு சேர்த்து குக்கரில் போடவும். 2 விசில் வந்ததும், கசகசா, தேங்காய் கலவையை போடவும்.

பெரிய வாணலியில் நெய்யை ஊற்றி, வடிகட்டிய அரிசியை அதில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து 2 லிட்டர் தண்ணீருடன் சேர்த்து குக்கரில் வேக விடவும்.

இப்போது நெய்யில் சிறிதளவு வெங்காயம், முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் வேக வைத்த சாதத்தை சிறிதளவு கொட்டி அதனுடன் சிறிதளவு கறிவேப்பிலை, புதினா, வதக்கிய வெங்காயம், முந்திரி, திராட்சையை பரவலாக கொட்டவும்.

எலுமிச்சை சாற்றை பிழிந்து விடவும். மட்டனை மேலாக பரவ விடவும்.

இதைப்போல ஒன்றன்மீது ஒன்றாக 3 அடுக்குகளாக அடுக்கவும். பிறகு அதை தம் கட்டி 10 நிமிடம் வைக்கவும்.

அவ்வளவுதான் சூடான சுவையான மலபார் பிரியணி ரெடி!

குறிப்புகள்: