கேரளா பீஃப் பிரியாணி
தேவையான பொருட்கள்:
மாட்டிறச்சி – 2 கிலோ
தயிர் – 1 கப்
மல்லித்தளை – தேவைக்கேற்ப
புதினா – தேவைக்கேற்ப
பிரியாணி மசாலா – 3 மேஜைக்கரண்டி
தக்ககாளி – 1 (பெரியது)
பச்சை மிளகாய் – 2
பாஸ்மதி அரிசி – 3 1/2 கப்
ஜீரகத் தூள் – 1 மேஜைக்கரண்டி
பொரித்த வெங்காயம் – 1 (சிறியதாக நறுக்கி பொரித்தது)
வெங்காயம் – 2 (பெரியது)
உருளைக்கிழங்கு – 5 (பாதியாக வெட்டியது)
மஞ்சள் தூள் – 1 மேஜைக்கரண்டி
நெய் – 3 மேஜைக்கரண்டி
குங்குமப் பூ – 1 மேஜைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 3 மேஜைக்கரண்டி
ஜீரகம் – 3 மேஜைக்கரண்டி
நீா் – தேவைக்கு
பட்டை – 1
ஏலக்காய் - 5
கிராம்பு - 4
பச்சை பட்டாணி – 1 கப் (வேக வைத்தது)
உப்பு - தேவையான அளவு
வெஜிடபிள் ஆயில் – 6 மேஜைக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் இறச்சியை எடுத்துக் கொள்ளவும்
பின்பு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் தயிர் சேர்த்து ஒரு இரவு முழுவதும் அல்லது பாதி நாள் ஊற வைக்கவும்.ஃபிரிட்ஜில் வைக்கலாம். பின்பு அதனை எடுத்து குக்கரில் மாற்றி வைத்து அதனுடன் உப்பு சேர்க்கவும்
பின்பு உருளைக் கிழங்கை எண்ணெயில் பாதி வேகும் வரை பொரித்தெடுக்கவும்
பின்பு இஞ்சி பூண்டு விழுது, புதினா, மல்லித் தளை, தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
பின்பு அந்த விழுதை இறச்சியுடன் குக்கரில் விடவும். அதனுடன் ஜீரகம், 1 பட்டை, 3 ஏலக்காய், 2 கிராம்பு மற்றும் பிரியாணி மசாலா, ஜீரகத் தூள் சோ்த்து நன்கு கலக்கவும்
பின்பு அதனுடன் சிறிது மஞ்சள் தூள் கலந்த நீர், பாதியளவு பொரித்த வெங்காயம், பாதியளவு பச்சை பட்டாணி மற்றும் 1 மேஜைக்கரண்டி நெய் சேர்க்கவும் சேர்க்கவும்.
நன்கு கலக்கவும் மற்றும் அதனுடன் ஊருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கலக்கி 10 நிமிடம் வைக்கவும்
பின்பு சுவையை சரிபார்த்துக் கொள்ளவும்
பின்பு தேவையான அளவு நீர் சேர்க்கவும். (காய்கறிகள் மறையும் அளவிற்கு நீர் சேர்க்க வேண்டாம்) மீண்டும் அனைத்தையும் நன்கு கலக்கவும்
பின்பு 1 லிட்டர் நீரில் உப்பு, 1 பட்டை, 1 மேஜைக்கரண்டி ஜீரகம், 2 ஏலக்காய், 2 கிராம்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்
பின்பு சுத்தம் செய்த அரிசயை அதில் போட்டு பாதி வேகும் வரை வைக்கவும். பின்பு அதனை வடிகட்டவும்
பின்பு பாதி அரிசியை இறச்சியின் மீது போடவும் பின்பு அதன் மேல் பச்சை பட்டாணி மற்றும் பொரித்த வெங்காயம் சேர்க்கவும். பின்பு குங்குமப் பூ மற்றும் மஞசள் தூள் கலந்த நீர் சேர்க்கவும்
பின்பு மீதமுள்ள அரியை அதன் மேல் போடவும். அதன் மேல் மீண்டும் பச்சை பட்டாணி மற்றும் பொரித்த வெங்காயம் குங்குமப் பூ மற்றும் மஞ்சள் தூள் கலந்த நீர் சேர்க்கவும்
பின்பு 2 மேஜைக்கரண்டி நெய் சேர்க்கவும். பின்பு பிரஷர் குக்கரை மூடி வைத்து 30–40 நிமிடம் வேக வைக்கவும் பின்பு இறக்கி மீண்டும் 20 நிமிடம் வைக்கவும். பின்பு மீண்டும் 40 நிமிடம் தம் போடவும்
பீஃப் பிரியாணி ரெடி மிதமான சூட்டில் பரிமாறவும்