கீமா பிரியாணி
தேவையான பொருட்கள்:
மட்டன் கீமா - கால் கிலோ
பாசுமதி அரிசி - 2 டீ கப் (30 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்தது)
பட்டை - ஒரு இன்ச் துண்டு
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பெரிய வெங்காயம் - 3 அல்லது சின்ன வெங்காயம் - 20
பச்சை மிளகாய் - 3
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தக்காளி - 2
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா இலை - ஒரு கைப்பிடி அளவு
எலுமிச்சைச்சாறு - 2 தேக்கரண்டி
நெய் - 4 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் நெய்யை சூடாக்கி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பொரிந்ததும் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கவும். அதனுடன் தக்காளி, கொத்தமல்லி, புதினா இலை சேர்த்து மேலும் வதக்கி கரம் மசாலாத் தூள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு மசிந்ததும் மட்டன் கீமா சேர்த்து சுமார் 2 தேக்கரண்டி உப்பு சேர்த்து 2 கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
பின் அதில் ஊறவைத்து வடித்த அரிசி சேர்த்து கொதிக்க விடுங்கள்
ஒரு கொதி வந்ததும் மூடி போட்டு குறைந்த தீயில் 40 நிமிடம் வேக விடுங்கள்.
கடைசி 10 நிமிடத்திற்கு முன் எலுமிச்சைச்சாறு சேர்த்து கிளறி மூடுங்கள். சுவையான கீமா பிரியாணி ரெடி.
குறிப்புகள்:
தயிர் சட்னியுடன் சூப்பராக இருக்கும்