காயல்பட்டிணம் ஸ்பெஷல் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – 3 கப்
சிக்கன் – 1/2 கிலோ
இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜை கரண்டி
பட்டை – 1,
கிராம்பு – 3 ,
ஏலக்காய் – 2
தயிர் – 1/4 கப் + 2 மேஜை கரண்டி
------------------------------------
-- சேர்க்க வேண்டிய எண்ணெய் : ---
------------------------------------
தேங்காய் எண்ணெய் – 2 மேஜை கரண்டி
எண்ணெய் – 1 மேஜை கரண்டி
நெய் – 1 மேஜை கரண்டி
------------------------------------
-- நறுக்கி கொள்ள் : ---
------------------------------------
வெங்காயம் – 2 பெரியது
தக்காளி - 2
பச்சைமிளகாய் – 6 - 8 (காரத்திற்கு ஏற்றாற் போல சேர்த்து கொள்ளவும்.)
புதினா – 1 கைபிடி
கொத்தமல்லி – 1 கைபிடி
------------------------------------
-- சேர்க்க வேண்டிய தூள் வகைகள் : ---
------------------------------------
மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு
------------------------------------
-- அரைத்து கொள்ள : ---
------------------------------------
தேங்காய் – 2 துண்டு
கசகசா – 1 தே.கரண்டி
முந்திரி – 5 பருப்பு
பாதாம் – 5 பருப்பு
பிஸ்தா – 5 பருப்பு
செய்முறை:
வெங்காயம் + தக்காளியினை நீட்டாக வெட்டி கொள்ளவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறிவைக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.
அரிசியினை 10 – 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும். சிக்கனுடன் 1 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது + 1/4 கப் தயிர் + 1 தே.கரண்டி உப்பு சேர்த்து கலந்து ஊறவைத்து கொள்ளவும்.
பட்டை + கிராம்பு + ஏலக்காய் + இஞ்சிபூண்டு விழுது + 2 மேஜை கரண்டி தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும். இது தான் முதலில் தாளிக்கும் கலவை
கடாயில் கொடுத்துள்ள எண்ணெய் வகையினை அனைத்தும் ஊற்றி சூடானதும் கலந்து வைத்து இருக்கும் தாளிக்கும் கலவையினை சேர்த்து வதக்கவும்.
சிறிது வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளியினை சேர்த்து வதக்கவும்
தக்காளி வதங்கிய பிறகு நறுக்கி வைத்துள்ள புதினா + கொத்தமல்லி + பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கிய பிறகு, ஊறவைத்த சிக்கனை சேர்த்து வதக்கவும்.
இத்துடன் கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும். பிறகு அதில் ஊறவைத்துள்ள பாஸ்மதி அரிசியினை சேர்த்து 90% வேகவைத்து கொள்ளவும். அதில் இருந்து தண்ணீர் வடித்து கொள்ளவும்.
சிக்கன் பாதி வெந்தததும் அரைத்து வைத்து இருக்கும் விழுது + 1 கப் தண்ணீர் இதில் சேர்த்து கலந்து வேகவிடவும்.
நன்றாக வெந்து Thick Consistency வரும் வரை வேகவிடவும்.
வேகவைத்து இருக்கும் அரிசியினை இதில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இதனை அப்படியே தட்டு போட்டு மூடி மிகவும் குறைந்த தீயில் வைத்து வேகவிடவும்.
சுவையான பிரியாணி ரெடி. இதனை தயிர் பச்சடி, சிக்கன் ப்ரை போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்புகள்:
சமைக்க தேவைப்படும் நேரம் : 1 மணி நேரம்
இந்த பிரியாணியில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும். அதே மாதிரி ரம்பை இலை பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.
தேங்காய் + கசாகசா + பருப்பு (முந்திரி, பாதாம், பிஸ்தா) அனைத்தும் சேர்த்து அரைத்து சிக்கன் மசாலாவில் சேர்க்க வேண்டும்.
காரத்திற்கு மிளகாய்தூளினை குறைத்து பச்சைமிளகாயினை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.
கொடுத்துள்ள அளவில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
பாதாம் + முந்திரி + பிஸ்தா கொடுத்துள்ள அளவே போதும். விரும்பினால் தேங்காயினை சிறிது அதிகம் சேர்த்து கொள்ளலாம்.