காடை பிரியாணி
![on](https://df185t4o2sp9n.cloudfront.net/content/images/menu/star-on.png)
![on](https://df185t4o2sp9n.cloudfront.net/content/images/menu/star-on.png)
![on](https://df185t4o2sp9n.cloudfront.net/content/images/menu/star-on.png)
![on](https://df185t4o2sp9n.cloudfront.net/content/images/menu/star-on.png)
![off](https://df185t4o2sp9n.cloudfront.net/content/images/menu/star-off.png)
தேவையான பொருட்கள்:
காடை – 4
அரிசி – 4 கப்
பட்டை – 3
பிரிஞ்சி இலை – ஒன்று
கிராம்பு – 6
அன்னாசிப் பூ – அரை ஸ்பூன்
ஏலக்காய் – 3
முந்திரி – 10
பெரிய வெங்காயம் – கால் கிலோ
தக்காளி – 100 கிராம்
புதினா – 4 கொத்து
கொத்தமல்லித் தழை – 4 கொத்து
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தயிர் – அரை கப் மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
தனி மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – 50 கிராம் பூண்டு – 50 கிராம்
மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
டால்டா – ஒரு டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை பழம் – ஒரு மூடி
பன்னீர் – ஒரு ஸ்பூன்
தண்ணீர் – 6 கப்
செய்முறை:
இஞ்சி, பூண்டை தோல் உரித்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். மிளகு, சீரகம் இரண்டையும் பொடி செய்யவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கவும்.
குக்கரில் எண்ணெய், நெய் மற்றும் டால்டா போட்டு காய்ந்ததும் பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு, அன்னாசிப் பூ, ஏலக்காய், முந்திரி போட்டு வதக்கவும்.
அதன் பிறகு நறுக்கின வெங்காயம் போட்டு 4 நிமிடம் சிவக்க வதக்கவும். பிறகு அதில் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் தக்காளி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
காடையை சுத்தமாக கழுவி விட்டு அரைஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் உப்பு, கால் கப் தயிர் சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். காடை நன்கு ஊறியதும் எடுத்து ஒரு முறை கழுவிக் கொள்ளவும். ஒரு நிமிடம் கழித்து வெங்காயம் மற்றும் தக்காளி வதங்கியதும் காடையை போட்டு நான்கு நிமிடம் பிரட்டி விடவும். பிறகு அதில் இஞ்சி, பூண்டு விழுதை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு மீதம் உள்ள கால் கப் தயிரை ஊற்றி மிளகு, சீரகத் தூளை மேலே பரவலாக தூவி கிளறி விடவும். அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், பச்சை மிளகாய் போட்டு நன்கு பிரட்டி உப்பு போட்டு 2 நிமிடம் கிளறி விடவும்.
2 நிமிடம் கழித்து மசாலா எல்லாம் ஒன்றாக சேர்ந்ததும் தண்ணீர் ஊற்றி கிளறி விடவும். அரிசியில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணிநேரம் ஊற வைக்கவும். 10 நிமிடம் கழித்து ஊற வைத்திருக்கும் அரிசியை போட்டு கரண்டியால் நன்கு கிளறி விட்டு பிறகு 4 நிமிடம் மூடி போடவும்.
நான்கு நிமிடம் கழித்து முக்கால் பதம் வெந்ததும் திறந்து எலுமிச்சை ஒரு மூடி பிழியவும். ஒரு ஸ்பூன் பன்னீர் ஊற்றி கொத்தமல்லித் தழை போட்டு கிளறி விடவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதன் மேலே குக்கரை வைத்து ஒரு கனமான தட்டை வைத்து மூடவும். அதன் பின்னர் தண்ணீரை கொதிக்க வைத்து அந்த தட்டில் ஊற்றி தம்மில் போடவும். தீயை நன்கு குறைத்து 10 நிமிடம் வைத்து விடவும்.
10 நிமிடம் கழித்து மேலே உள்ள தட்டை எடுத்து விட்டு கரண்டியால் ஒரு முறை கிளறி அடுப்பில் இருந்து இறக்கி விடவும். காடை பிரியாணி தயார். இதற்கு ஆனியன் ரைத்தா வைத்து சாப்பிடலாம்.