ஊன் சோறு சங்ககால உணவு
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
பாஸ்மதி அரிசி – 3 கப்
தயிர் -1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1 தே.கரண்டி
தேங்காய் பால் – 2 கப்
---------------------
-- முதலில் தாளிக்க --
----------------------
எண்ணெய் – 2 மேஜை கரண்டி
நெய் – 1 மேஜை கரண்டி
கிராம்பு – 2
பட்டை -1 துண்டு
பிரியாணி இலை – 1
ஏலக்காய் – 2
---------------------
-- சேர்க்க வேண்டிய தூள் வகைகள் --
----------------------
சின்ன வெங்காயம் – 10 (சுமார் 50 -60 கிராம்)
பச்சைமிளகாய் – 5 (காரத்திற்கு ஏற்றாற் போல)
மிளகு – 1 தே.கரண்டி
சீரகம் – 2 மேஜை கரண்டி
பட்டை – 1 பெரிய துண்டு , கிராம்பு - 2
ஏலக்காய் – 2
கொத்தமல்லி – 1 கைபிடி
புதினா – 1 கைபிடி
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தும் மிக்ஸியில் போட்டு கொரகொரவென அரைத்து கொள்ளவும். சிக்கனை தயிர் சேர்த்து கலந்து 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். பாஸ்மதி அரிசியினை தண்ணீர் சுமர்ர் 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும்.
இத்துடன் ஊறவைத்துள்ள சிக்கன் சேர்த்து கொள்ளவும்
பிறகு, மஞ்சள் தூள் + தனியா தூள் சேர்த்து கொள்ளவும்.
அனைத்து நன்றாக கலந்து கொள்ளவும். பாஸ்மதி அரிசியினை கழுவி அதனை இத்துடன் சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.
இத்துடன் தேங்காய் பால் சேர்த்து 1 – 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும்
அரைத்து வைத்துள்ள விழுதினை இத்துடன் சேர்த்து கொள்ளவும். சரியான அளவு உப்பு + தேவையான அளவு தண்ணீர் (சுமார் 4 கப் தண்ணீர் )சேர்த்து வேகவிடவும்.
சுவையான பிரியாணி ரெடி. இதனை தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்புகள்:
நான் சின்ன வெங்காயத்திற்கு பதிலாக பெரிய வெங்காயம் பயன்படுத்தி இருக்கின்றேன். சின்ன வெங்காயத்தில் செய்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
இதனை நான் அப்படியே தம் போட்டு வேகவிட்டேன். விரும்பினால் தம் போடுவதற்கு பதில், பிரஸர் குக்கரில் 1 விசில் வரும் வரை வேகவிடவும்.
வெரும் தண்ணீர் சேர்ப்பதற்கு பதிலாக Chicken Stock / vegetable Stock சேர்த்து கொள்ளலாம்.
தனியா தூள் சேர்ப்பதற்கு பதிலாக முழு தனியாவினை அரைக்க கொடுத்துள்ள பொருட்களுடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்.