ஈஸி குவிக் வெஜ் பிரியாணி 1

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பட்டை - ஒன்று

கிராம்பு - ஐந்து

ஏலக்காய் - ஒன்று

பிரியாணி இலை - ஒன்று

மராட்டி மொக்கு - ஒன்று

சோம்பு - கால் டீஸ்பூன்

பச்சை மிளகாய் - ஐந்து

மிளகாய் வற்றல் - ஒன்று

தயிர் - ஒரு கப்

மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகு - மூன்று (வாசனைக்கு மட்டும் தான்)

லெமன் - அரை மூடி

சீரகம் - ஒரு டீஸ்பூன்

தக்காளி - 1

காய்கறிக்கலவை - ஒரு கப் + அரை கப் (உருளை, பீன்ஸ், காரட், முள்ளங்கி, காலிஃப்ளவர், பச்சை பட்டாணி)

உப்பு - தேவையான அளவு

நெய் - இரண்டு மேசைக்கரண்டி

எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்

அரிசி - 1 (1/2) கப்

மல்லி இலை - அலங்கரிக்க

செய்முறை:

எண்ணெய் மற்றும் நெய்யை பாத்திரத்தில் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு, மிளகு, சீரகம், மராட்டி மொக்கு எல்லாத்தையும் சேர்த்து பொரிய விடவும்.

மிளகாய் வற்றலும் பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கி காய்கறிகளை போட்டு வதக்கவும்.

அதில் அரிசி, தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

அதனுடன் தயிர் சேர்த்து பாதி அளவு மிளகாய் தூள் சேர்த்து நான்கு டம்ளர் நீர் விட்டு கிளறி உப்பு போட்டு வேக விடவும்.

சாதம் நன்கு வெந்ததும் மீதம் உள்ள மிளகாய் தூள் தூவி கிளறி மல்லி இலை தூவி லெமன் பிழிந்து இறக்கவும்.

குறிப்புகள்: