ஈசி வெஜ் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி - 3 கப்
காரட் - 3
பீன்ஸ் - 10
பச்சை பட்டாணி - ஒரு கப்
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - ஒன்று
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - 6 பல்
உப்பு - தேவைக்கேற்ப
நெய் - சிறிது
பட்டை - சிறிது
ஏலக்காய் - சிறிது
கிராம்பு - சிறிது
மிளகுப்பொடி - 10 கிராம்
மஞ்சள்பொடி - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி - கொஞ்சம்
எண்ணெய் - 150 கிராம்
செய்முறை:
முதலில் அரிசியை வேக வைத்து வடித்து எடுத்து கொள்ள வேண்டும்.
காய்கறிகளை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெயையும், நெய்யையும் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவைகளைப் போட்டு சிவக்க வதக்கவும்.
அதன் பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும். பிறகு நறுக்கின பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்
பிறகு காய்கறிகள், மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து குறைந்த தீயில் வேகும் வரை வதக்கவும்.
வெந்ததும் கொத்தமல்லி மற்றும் மிளகுப்பொடி தூவி சாதத்தை அதில் கொட்டி நன்கு கிளறி விட்டு பரிமாறவும்.