இறால் பிரியாணி (7)
தேவையான பொருட்கள்:
பச்சரிசி / பாஸ்மதி - அரை கிலோ
இறால் - கால் கிலோ
வெங்காயம் - கால் கிலோ
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 10 பற்கள்
இஞ்சி - 2 அங்குலத் துண்டுகள்
மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு
புதினா - ஒரு கைப்பிடி அளவு
உப்புத் தூள் - 2 தேக்கரண்டி
பட்டை - 2 துண்டுகள்
பிரிஞ்சி இலை - 2
செய்முறை:
முதலில் பச்சரிசியுடன் பிரிஞ்சி இலை சேர்த்து உதிரி உதிரியாக வேக வைத்து வடித்துக் கொள்ளவும். இஞ்சியுடன் பூண்டைச் சேர்த்து அரைத்து வைக்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கறிவேப்பிலை தாளித்து, நீளவாட்டில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு கொத்தமல்லித் தழை மற்றும் புதினாவைப் போட்டு நன்கு கிளறவும்.
அத்துடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்புத் தூள் சேர்த்துக் கிளறவும்.
மசாலா தொக்கு பதத்திற்கு வந்தவுடன் சுத்தம் செய்த இறாலைச் சேர்த்துக் கிளறவும்.
பிறகு வடித்து வைத்துள்ள சாதத்தைக் கொட்டி நன்றாகக் கிளறிவிட்டு இறக்கி வைக்கவும்.
சுவையான இறால் பிரியாணி தயார். இந்த பிரியாணியில் கறிவேப்பிலை சேர்த்திருப்பதால் வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்