இறால் பிரியாணி (6)
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - அரை கிலோ
இறால் - கால் கிலோ
வெங்காயம் - கால் கிலோ
தக்காளி - மூன்று
பச்சைமிளகாய் - நான்கு
பூண்டு - பத்துபற்கள்
இஞ்சி - இரண்டு அங்குலத்துண்டுகள்
மிளகாய்தூள் - மூன்று தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
நெய் - இரண்டு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு பிடி
புதினா - ஒரு பிடி
உப்புதூள் - இரண்டு தேக்கரண்டி
பட்டை - இரண்டு துண்டுகள்
பிரிஞ்சி இலை - இரண்டு எண்ணிக்கை
செய்முறை:
முதலில் பச்சரிசியை உதிரி உதிரியாக வடித்து கொள்ளவும்.
இறாலை நன்கு சுத்தம் செய்துக்கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றவும். காய்ந்ததும் வெங்காயம் தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிப் போடவும்.
பிறகு பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை, இறாலை போட்டு நன்கு வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும் தட்டிவைத்துள்ள இஞ்சி பூண்டு, மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்புதூள் போட்டு நன்கு கிளறவும்.
அரைக்கோப்பை தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
மசாலா தொக்கு போல் ஆனவுடன் கொத்தமல்லி, புதினாவை போட்டு கிளறவும்.
பிறகு வடித்து வைத்துள்ள சோற்றை கொட்டி நெய்யை ஊற்றி நன்றாக கிளறிவிட்டு இறக்கிவைக்கவும். சுவையான இறால் பிரியாணி தயார்.